பிரபல நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்!

தமிழில் ‘பம்பரக்கண்ணாலே’ படம் உட்பட சில படங்களில் நடித்தவர் ஆர்த்தி அகர்வால். ஒருகாலத்தில் தெலுங்கின் முன்னணி நடிகையும் கூட! இப்போதும் நடித்துக் கொண்டிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட அவர் கதாநாயகியாக நடித்த ரணம் என்ற படம் தெலுங்கில் வெளியாகியிருக்கிறது.

ஒரு நடிகைக்கு என்னவெல்லாம் கஷ்டம் சோதனைகள் வருமோ? அவையெல்லாம் அவருக்கும் இருந்திருக்கும் போல…. ஒரு முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டவர் ஆர்த்தி அகர்வால். இவரது தங்கையும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். குடும்பத்தோடு அடிக்கடி அமெரிக்கா செல்லும் வழக்கமுள்ளவர், கடந்த சில மாதங்களாக அங்குதான் இருந்தாராம்.

அங்கு என்ன நடந்ததோ? நியூ ஜெர்ஸி நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மூச்சு திணறல் காரணமாக அவர் மரணம் அடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன. அவரது ஆத்மா சாந்தியடைய நியூ தமிழ்சினிமா.காம் பிரார்த்திக்கிறது.

Read previous post:
சூர்யா சார் டென்ஷன் கொடுத்துட்டாரு! பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி கவலை

பல நூறு கோடிகளை அள்ளிவிழுங்கிவிட்டு அசுர பாய்ச்சலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது பாகுபலி! நான் ஈ, மஹதீரா போன்ற படங்களின் மூலம் இந்தியாவின் மிக முக்கியமான இயக்குனராகிவிட்டார் எஸ்.எஸ்.ராஜமவுலி....

Close