நெடுஞ்சாலை நாயகியின் “அருவி “

கல்சன் மூவீஸ்(பி) லிட் படநிறுவனம் தற்போது ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீ திவ்யா நடிக்க மணிநாகராஜ் இயக்கத்தில் “ பென்சில் “ என்ற படத்தை தயாரித்துக் கொண்டிருகிறது. முடிவடையும் நிலையில் உள்ள பென்சில் படத்தைத் அடுத்து நெடுஞ்சாலை கிருஷ்ணா இயக்கத்தில் ஆரி நடிக்கும் “ மானே தேனே பேயே” என்ற படத்தையும் தயாரிகிறார்கள்.. அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

இப்படங்களை தொடர்ந்து கல்சன் மூவீஸ்(பி) லிட் படநிறுவனம் “ அருவி “ என்ற படத்தை தயாரிக்கிறது. சந்துரு கதாநாயகனாக நடிக்கிறார்.இவர் திரைக்கு வர உள்ள ஷிவானி என்ற படத்தின் நாயகன். நாயகியாக நெடுஞ்சாலை படத்தின் கதாநாயகி ஷிவதா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கிஷோர் நடிக்கிறார். இன்னும் சில முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்கிறார்கள் அதற்க்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருகிறது.

ஒளிப்பதிவு – P.G. முத்தையா
இசை – ராஜேஷ்ராஜ் இவர் ஜாஸிகிப்டிடம் உதவியாளராகப் பணியாற்றியதுடன் இரண்டு மலையாளப் படங்களுக்கு இசையமைக்கிறார்.
பாடல்கள் – ஜெயந்தா
கலை – ராஜமோகன்
எடிட்டிங் – M.V.ராஜேஷ்குமார்
கதையை சரவணன் எழுத , திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் நீலன். இவர் கிருஷ்ணா நடித்த “ அலிபாபா” என்ற படத்தை இயக்கியவர்.
தயாரிப்பு – கல்சன் மூவீஸ் (பி ) லிட்

படம்பற்றி இயக்குனரிடம் கேட்ட போது…

ஜனரஞ்சகமான படம் இது. எமோஷனல் கதையை சுவைபட சொல்கிறோம். வீழ்ச்சியிலும் அழகியலை கொண்டது அருவி ….அருவி விழும்போது அதில் மயங்காதவர்கள் இல்லை. இந்த “ அருவி “ நிச்சயம் நல்ல படமாக உருவாகும்.. விரைவில் படப்பிடிப்பை துவக்க உள்ளோம் என்றார் இயக்குனர் நீலன். கல்சன் மூவீஸ் பட நிறுவனம் திறமையுள்ள கலைஞர்களை அடையாளம் கண்டு உற்சாகப்படுத்தி தரமான படங்களை தொடர்ச்சியாக தரும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Master K.L.Dheeran’s (5years old) Record Attempt On Most National Flag Identified In One Minute

Master K.L Dheeraj is now 5 years old. He is studying in U.K.G - Padma Seshadri School – K.K. Nagar....

Close