காருக்குள் அசின்! கட்டிப்பிடித்த தொழிலதிபர்? பற்றியெறியும் மும்பை படவுலகம்!

மும்பை பத்திரிகையுலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது ஒரு விஷயம். காதும் காதும் வச்ச மாதிரி காருக்குள்ளே நடந்த ஒரு விஷயத்தை ஊருக்குள்ளே வந்து ஓப்பன் பண்ணியிருக்கிறது அது. இதனால் அசினின் பளிங்கு மாளிகையில் ஆங்காங்கே அழுக்கு! எந்த சோப்பை கொண்டு இதை துடைக்கப் போகிறாரோ? அவருக்கே வெளிச்சம்!

ஆல் இஸ் வெல் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அசின். இவருக்கு ஜோடி அபிஷேக் பச்சன். படத்தின் பெயர்தான் ஆல் இஸ் வெல். ஆனால் அவர் செய்திருக்கும் இந்த காரியம் ஆல் இஸ் பேட்! சில தினங்களுக்கு முன் மும்பை பந்த்ரா பகுதியில் ஒரு காருக்குள் ஒரு தொழிலதிபருடன் கசாமுசாவில் ஈடுபட்டிருந்தாராம் அவர். அந்த வழியாக போன மீடியாக்காரர் கண்களுக்கு ரொம்பவே மங்கலாக தெரிந்திருக்கிறது காட்சி. உற்று உற்று பார்த்தவருக்கு அது அசின் என்பது மட்டும் பளிச்சென புரிந்திருக்கிறது. உடனே சக பிரஸ்காரர்களுக்கு போன் போட்டு வரவழைத்துவிட்டார். அதற்குள் தான் காருக்குள் இருப்பதை, ‘கண்ட கண்ட கழிசடைக் கண்களும்’ திருட்டுத்தனமாக போட்டோ எடுப்பதை உணர்ந்த அசின், காரை கிளப்பிக் கொண்டு போக சொல்லிவிட்டாராம்.

பின் தொடர்ந்து துரத்திய பிரஸ்சுக்கு ஒரு க்ளூவும் சிக்கவில்லை. ஆனால் அந்த கார் நம்பரை வைத்து தொழிலதிபர் யாரென கண்டுபிடிக்க கிளம்பியிருக்கிறார்கள். இன்னும் இரண்டொரு நாளில் ஆள் யார் என்பதை கண்டுபிடித்து….

ஆமா, கண்டுபிடிச்சு? போஸ்டர் அடிச்சு ஒட்டிருவாய்ங்களாக்கும்!

பால் எது? பாம் எதுன்னே தெரியாம வாழ்ந்துகிட்டு இருக்கிற ஊர்ல, இவிங்ய்ங்க வேற!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சண்டிவீரன் – விமர்சனம்

‘நீரின்றி அமையாது உலகு’ என்பதை நிறையவே சொல்லி வருகிறது தமிழ்சினிமா. பல இயக்குனர்கள் வேறொரு நீர் (?-) ஏரியாவில் உருண்டு புரண்டு அவரவர் கதையை ஓட்டிக் கொண்டிருக்கும்...

Close