வடிவேலு அனுப்பிய ஆடியோ! அரண்டு போன தயாரிப்பாளர்!

சப்பிப் போட்ட பபுள்கம் மாதிரிதான் தயாரிப்பாளர்களை ட்ரீட் பண்ணிக் கொண்டிருக்கிறார் வடிவேலு. கால்ஷீட்டும் கிடைப்பதில்லை. கொடுத்த அட்வான்சும் திரும்புவதில்லை என்கிற கொடூர அனுபவத்தை சந்திக்கிற தயாரிப்பாளர்கள், ‘சரிய்யா… உன் சங்காத்தியமே வேணாம். எப்ப கொடுப்பேன்னு சொல்லு. அது போதும்’ என்று கேட்டாலும், ‘யானைக்கு பானை சரியாப்போச்சு’ என்கிற லெவலிலேயே பதில் வருகிறதாம் அவரிடமிருந்து.

பல்க் அட்வான்ஸ் கொடுத்த ஷங்கரே, பஞ்சர் ஆகிக் கிடக்கும் போது லட்சங்களில் அட்வான்ஸ் கொடுத்தவர்களின் கதி? முருங்கைக்காயை எடுத்து மூக்குல விட்டுக் கொண்டது போல ஒரே தும்மல், துயரம்!

ஜி.வி.பிரகாஷுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்தார் வடிவேலு. சந்தானத்தை வைத்து ஒரு படத்தை இயக்கிய ராம்பாலா என்பவர்தான் இயக்குனர். முதலில் அந்த சீனை இப்படி வச்சுக்கலாம். இந்த சீன்ல இதை நுழைச்சுக்கலாம் என்று ஐடியா கொடுத்த வேலு, ஒரு கட்டத்தில் ஜி.வி.பிரகாஷ் எதுக்கு இந்தப்படத்துல? நான் பார்த்துக்க மாட்டேனா என்கிற அளவுக்கு திண்ணையை ஆக்ரமிக்க…. வடிவேலுவே வேணாம் என்கிற முடிவுக்கு போய்விட்டாராம் ராம்பாலா.

கட்…. வடிவேலுவிடம், அட்வான்சை கொடுத்துருங்க என்று கூறிவிட்டார்கள். பல மாதங்கள் ஆன நிலையில், நோ ரெஸ்பான்ஸ் பிரம் வெடிவேலு! எங்கெங்கோ பஞ்சாயத்து வைத்து வழி தெரியாத தயாரிப்பாளர், நேரடியாக வடிவேலுவுக்கே ஒரு வாட்ஸ் ஆப் ஆடியோ அனுப்பினாராம். என்னவென்று?

‘அட்வான்சை திருப்பித் தரலேன்னா உங்க வீட்டு வாசலில் உண்ணாவிரதம் இருப்பேன்’ என்று.

பதிலுக்கு வடிவேலுவும் ஒரு வாட்ஸ் அனுப்பி வைத்தாராம். அதில், ‘நாலு நாளுக்கு என்னை பத்திரிகைகாரனுங்க கிழிப்பானுங்க. அப்பறம்? எல்லாம் மறந்துட்டு அடுத்த பிரச்சனைக்கு போயிருவானுங்க. அப்பவும் பணத்தை நான்தான் தரணும், தெரியும்ல?’ என்று அதில் கூறப்பட்டிருக்க…. எந்தப்பக்கம் போனாலும் மறிக்கிறாரேய்யா…? என்று கவலையாகிக் கிடக்கிறாராம் தயாரிப்பாளர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அடைமழை! டிரைவரை நம்பிய அனுஷ்கா!

https://www.youtube.com/watch?v=lg97pJg1K6w

Close