விஜய்யின் பைரவா! லட்டு லட்டாக எட்டு ஹைலைட்ஸ்!

கேரளாவில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றின் அடிப்படையில்தான் இந்தக்கதையை உருவாக்கியிருக்கிறார் பரதன்.

பைரவா தலைப்பை வைக்கும் முன் விஜய் தரப்பிலிருந்து சொல்லப்பட்ட ஒரே விருப்பம் இதுதான். “தலைப்பு ஒரு வார்த்தையில் இருக்கட்டும்ங்ணா…”

அப்பா எஸ்.ஏ.சி இயக்கத்தில் டூரிங் டாக்கீஸ் படத்தில் அறிமுகமான பாப்ரி கோஷ், இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். ரெகமண்டேஷன் வேறு யாருமல்ல. எஸ்.ஏ.சியேதான்.

தனியா பஞ்ச் டயலாக் வேணாங்ணா… பேசுற டயலாக்கே பஞ்ச் ஆ இருக்கட்டும் என்று கூறியிருக்கிறார் விஜய். அப்படியே எழுதியிருக்கிறார் பரதன்!

கிராமத்து இளைஞன், மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட் என இரண்டு கெட்டப்புகளில் வருகிறார் விஜய். அதுவே டபுள் ஆக்ட்டா என்பதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார் பரதன்.

கபாலி பட வில்லன் மைம் கோபிக்கு இதிலும் ஒரு முக்கிய ரோல் இருக்கிறதாம். விஜய்யிடம் இவரைப் பற்றி சொல்லியே உள்ளே நுழைத்தாராம் பரதன்.

கண்டிப்பாக இந்தப்படத்திலும் சொந்தக்குரலில் ஒரு பாடல் பாடுகிறார் விஜய்.

கேரள உரிமை இப்போதே விற்பனை ஆகிவிட்டது. சுமார் ஆறு கோடிக்கும் மேல் பிசினஸ் என்கிறார்கள்.

To listen audio click below:-

 

1 Comment
  1. Samaan says

    Irumugan: Anand Shankar direction makes us to sit through the movie. But when ciyaan vikram romances nayanatara it looks like mamanar (father in law) romancing nayan. he looks too old.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
படத்துல மூணு சிம்புவாம்! தாங்குவீங்களா மக்கா?

பூர்வ ஜென்மத்தில் நாய் ஜோடி ஒன்று சல்லாபிக்கும் போது நடுவில் கல்லெறிந்த பாவத்திற்காக முதலிரவே கொண்டாட முடியாத ஒருவனை பற்றிய கதையைதான் படமாக்கிக் கொண்டிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்....

Close