பாரதிராஜா வேலையற்றவராம்! வசவு சொல் வீசும் வாய் நீள எழுத்தாளர்!
குற்றப்பரம்பரை நாவலை யார் படமாக்குவது? இது குறித்த அடிதடி சண்டைகள் ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கத்தில். கடந்த பல வருடங்களாகவே இந்த கதையை படமாக்கப் போவதாக சொல்லி வருகிறார் பாரதிராஜா. ஆனால் அவருக்கு ஒரு உருப்படியான தயாரிப்பாளர்களோ, பைனான்சியர்களோ கிடைக்க மாட்டார்கள். மார்க்கெட்டில் யார் உயிர்ப்போடு இருக்கிறார்களோ, அவர்களுக்குதான் இதெல்லாம் வாய்க்கும். அந்த விஷயத்தில் பாரதிராஜா ஒரு எக்ஸ்பயரியான வீரிய மாத்திரையாச்சே?
இப்போது பாலாவே இந்தப்படத்தை எடுக்கப்போகிறார். அதற்கான முன் வேலைகள் ஆரம்பம் ஆகிவிட்டன. இது சாதியக் கதை என்பதால், அதே சாதியை சேர்ந்த பல விஐபிகள் சம்பந்தப்பட்ட இருவரையும் சந்தித்து வருகிறார்களாம். சிலர் இந்த படத்தை பாரதிராஜா இயக்கட்டும். அதுதான் சரியாக இருக்கும் என்றும், சிலர் பாலாவே இயக்கட்டும், அதுதான் நல்லது என்றும் கூறி வருகிறார்களாம். ஆனால் குற்றப்பரம்பரை கதையை திரை வடிவமாக்கிக் கொண்டிருக்கும் எழுத்தளார் வேல.ராமமூர்த்தி, பாலாவின் பக்கத்தில் நிற்கிறார். அதுமட்டுமல்ல, குற்றப்பரம்பரை கதையை எழுதியவரும் இவர்தான்.
இந்த சர்ச்சை குறித்து பிரபல வார இதழான குமுதம் வேல.ராமமூர்த்தியிடம் கருத்துக் கேட்கும் போது அவர் சொன்ன பதில்தான் ரொம்ப பொல்லாதது. கொம்பன், ரஜினி முருகன் போன்ற பல படங்களில் நடித்த வகையில் பிசியான நடிகராகவும் மாறிவிட்டார் இவர். ஏதோ ஒரு ஷுட்டிங்கில் நடித்துக் கொண்டிருக்கும் அவர், அந்த பணிகளுக்கு நடுவில்தான் தன் நெருப்பு வாயை திறந்து அனல் வீசியிருக்கிறார். “நான் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறேன். குற்றப்பரம்பரை ஸ்கிரிப்ட் தயாராகிடுச்சு. பாலா இயக்குகிறார். ஹீரோ எல்லாமே செலக்ட் ஆயாச்சு. நான் உங்களிடம் படத்தை முடித்துவிட்டு பேசலாம் என்று இருந்தேன். பாரதிராஜா தேவையில்லாமல் பேசுகிறார். அவர் வேலையத்தவர். சும்மா இருக்கிறார். எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. நம்ம செல்லமா வீட்டுல வளர்க்கிற நாலு மாத நாய்க்குட்டிக்கு கூட தெரியும். குற்றப்பரம்பரை வேல.ராமமூர்த்தியோட கதைன்னு. 80 வயசான பாரதிராஜாவுக்கு தெரியாதா என்ன? கூடிய சீக்கிரம் படம் வேலை ஆரம்பிக்கப் போவுது” என்று கூறியிருக்கிறார் அவர்.