நானும் கிரிக்கெட்டும்… பாபிசிம்ஹா பரிகாசம்!
‘மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்’ என்பது போல நடந்து கொள்கிற ஹீரோக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். முன்னாடி உட்கார்ந்திருப்பவர்கள் எல்லாம் ‘முக்கா மண்டையனுங்க’ என்று கவுண்டமணி கூட நினைத்ததில்லை. ஆனால் சில ஹீரோக்களின் பாடி லாங்குவேஜும் முகத்தில் தாண்டவமாடும் அலட்சிய களையும், ‘நான் அப்படிதான்டா’ என்றிருக்கும். கிட்டதட்ட அப்படிதான் இருந்தார் பாபி சிம்ஹா. ஆள் யாரும் கிடைக்காததால் இவரை அழைத்தார்களோ என்னவோ? நிகழ்ச்சிக்கு சுமார் இரண்டு மணி நேரம் கழித்து என்ட்ரி கொடுத்தார் பாபி.
அட என்ன நிகழ்ச்சி? கொஞ்சம் விவரமா சொல்லுப்பா…
சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் பேமஸ் பிரிமியர் லீக் போட்டியின் அறிவிப்பு பிரஸ்மீட் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்…. ஸாரி, வரவழைக்கப்பட்டிருந்தார் பாபிசிம்ஹா. ஸ்பாட்டுக்கு அவர் வருவதற்கே நிறைய கால தாமதம். வந்தவர் முகத்தில் சிரிப்பு ஈயாடவில்லை. அதை இன்னும் வலுப்படுத்துவது போல ஒரு சூயிங்கத்தை மென்று கொண்டே எதிரிலிருப்பவர்களை நோட்டம் விட்டார்.
போட்டி எங்கு நடக்கிறது. எப்படி நடக்கிறது. யார் யாரெல்லாம் விளையாடுகிறார்கள் என்பதை அறிவித்து முடித்ததும், மைக்கை பிடித்தார் பாபிசிம்ஹா. நானும் கார்த்தியும் ஒரு தடவை லைட்டா தண்ணிய போட்டுட்டு இருந்தோம். அப்ப டி.வியில் கிரிக்கெட் ஓடிட்டு இருந்திச்சு. இதுல யாரு இந்தியா, யாரு பாகிஸ்தான்னு கேட்டேன். கார்த்தி சொன்னான்… அட லூசு, இதுல இந்தியாவே ஆடலடா என்று. என்னுடைய கிரிக்கெட் அறிவு அவ்ளோதான் என்றார்.
பொருத்தமான ஆளைதான் கூட்டிட்டு வந்திருக்கீங்க… ஆல் தி பெஸ்ட் ‘பேமஸ் பிரிமியர் லீக்’!