அன்பண்ணன் அப்படிப்பட்டவரு இல்ல! வரிசை கட்டி வாசிக்கும் கடன் காரர்கள்!

கோடம்பாக்கத்தின் குபேர வங்கிதான் பைனான்சியர் அன்புச்செழியன். அவர் கதவை மூடிவிட்டால் அவ்வளவுதான்… தமிழ் திரையுலகமே காலி. இந்த நிஜத்தை வேறு வேறு வார்த்தைகளால் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழ்சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்கள் பலர். ‘நான் வாங்குனேன். நல்லாயிருக்கேன். அப்ப நீங்க?’ என்று விளம்பரத்தில் வரும் அப்பாஸ்கள் போல இவர்கள் வரிசை கட்டி பேசுவது வேடிக்கையாக இருந்தாலும், அவரவர்கள் வாயால் வருகிற கமென்ட்டுகள் எதுவும் புறக்கணிக்க தகுந்ததல்ல. விஜய் ஆன்ட்டனி, சுந்தர்சி, தேவயானி, சீனு ராமசாமி, லிங்கா புகழ் சிங்காரவேலன், இன்னும் நாளைக்கும் அதற்கு மறுநாளும் ஆடியோவை வெளியிடப் போகிற அன்பு உள்ளங்கள் என அத்தனை பேரும் சொல்லி வைத்தார் போல, ‘அன்பண்ணன் போல வருமா?’ என்றே பேசுகிறார்கள். பேசப்போகிறார்கள்.

இதெல்லாம் எதற்கு? அன்புச்செழியனை அரக்கன் என்று வர்ணிக்கும் இன்னொரு கோஷ்டியால் அவரது இமேஜ் இறங்கிவிடக் கூடாதே என்பதற்காக. அதைவிட முக்கியம் காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் இத்தகைய ஆடியோக்கள் அந்த நடவடிக்கையை இன்னும் நமத்துப் போக வைக்குமல்லவா?

அன்புச்செழியனை உத்தமர் என்று வர்ணித்திருந்த சீனு ராமசாமியின் ட்விட்டுக்கு கடும் ரீயாக்ஷன் காட்டியிருந்தார் கரு.பழனியப்பன். அதற்கப்புறம் விஜய் ஆன்ட்டனிக்கும் அவர் பதில் சொல்லியிருந்தார். இன்னும் சில இயக்குனர்கள் அன்புச்செழியனுக்கு ஆதரவாக கருத்து சொல்கிற தயாரிப்பாளர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்த மாறி மாறி அடித்துக் கொள்ளும் யுக்தியால், ஒரு தற்கொலை வெகு சீக்கிரம் மறக்கடிப்பட்டுவிட்டது.

கடைசி தகவல்- ‘கொடிவீரன்’ படம் இனி ஜென்மத்துக்கும் வராது என்பதாகவே இருக்கிறது. கல்குவாரி மணல்குவாரி மாதிரி, சினிமாவையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற ஒரு பொன்னான கருத்தை வெளியிட்டு அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கே பீதியூட்டி இருக்கிறார் அண்ணன் கருணாஸ் எம்.எல்.ஏ.

2 Comments
 1. Vallawan says

  sunder unnaku prachanai illa, nee ildya anba thalli vittaina matter solved.

 2. Kannan says

  அன்புசெழியன் தமிழன், தமிழன் தப்பு செய்யமாட்டான் -சீமான்
  அவரும் ஒரு சராசரி அரசியல் வாதியே

  வேறு ஒருவரை எதிர்ப்பதாக நினைத்து அன்புசெழியனுக்கு முட்டு கொடுக்கிறார்.
  விஷால் அன்புவுக்கு ஆதரவு கொடுத்து இருந்தால் சீமான்,தாணு சுரேஷ் க எதிர்த்து இருப்பார்கள் என்பதே உண்மை

  தமிழ் சினிமா ஒற்றுமை என்ன விலை.அன்பு செழியனுக்கு பின்னே ஓபிஸ்

  இன்னும் சில நாட்களில் ஓபிஸ் வீட்டில் ரெய்டு வரும் பாருங்கோ
  விஷால் இவ்வளவு தைரியமாக எதிர்க்க காரணத்தை விட ,பின்னால் பெரும் ஆதரவு இருக்கு BJP”

  சில மாதங்களுக்கு முன் ஞானவேல் ராஜா அன்புசெழியனால் மிரட்டபட்டார்.அதட்காக அவர் மத்திய நிதியமைச்சு துறையை வைத்து அன்புவை மிரட்ட ,அன்புஇந்த தொழிலிருந்து விலகவே இருந்தார். அதட்குள் இந்த மரணம்

  இதனால் சீமான் தான் மரியாதையை இழந்தார் .
  ஒரு அறிக்கையோடு விட்டிருக்கலாம் முட்டு கொடுக்க தேவை இல்லை

  ஒரு முன்னணி வார இதழில் தெளிவான விளக்கம் உள்ளது
  ஒபிஸ் – அன்புசெழியன் – சீமான்
  சேரன் கருத்து –

  அதுவே என் கருத்தும்
  Sorry seeman ???????????????

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அஜீத்தை மாற்றிய விவேகம்! இனி அலட்டல் இல்லை!

அஜீத்தை கடவுளாக பார்க்கும் ரசிகர்களால் கூட, விவேகம் படத்தை ஓட வைக்க முடியவில்லை. கூட்டிக் கழித்து கணக்கு போட்டு பார்த்தால், அவ்வளவும் அன்புச்செழியனின் வட்டிக்கு கூட தேறாத...

Close