டபுள்மீனிங் வசனம்? சைலண்ட் மோடில் சென்சார் கவலை தரும் கத்தரிக்கா!
‘முத்துன கத்தரிக்காய்’ என்று சுந்தர்சி தன் படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார். படத்தின் ஹீரோயின் பூனம் பாஜ்வாதான் தலைப்பின் தத்துவமாக இருக்கிறார் என்பது பலருக்கும் சொல்லாமலே புரிந்திருக்கும்.
“சாப்பாட்டு விஷயத்தில் நான் பட்டினியோ டயட்டோ கிடப்பதேயில்லை. வேணுங்குற அளவுக்கு சாப்பிடுவேன். என் பாடி சைஸ் புடிச்சுருந்தா நடிக்க சான்ஸ் கொடுங்க. இல்லேன்னா விடுங்க” என்று போல்டாக பேட்டியளித்து வந்த பூனத்தின் மனசறிந்து அவரை ஹீரோயின் ஆக்கியிருக்கிறார் சுந்தர்சி. அவருக்காகவே பண்ணிய கதையாம் இது.
அது போகட்டும்… படத்தில் தாறுமாறான டபுள் மீனிங் வசனங்கள் இருப்பதுதான் இளைஞர்களுக்கு குஷி தரப்போகிற சமாச்சாரம். பலமானவர்களை மட்டும் பதமாக டீல் பண்ணும் சென்சார், இந்த படத்தின் சென்சார் விஷயத்தில் அவ்வளவு அலட்டிக் கொள்ளவில்லை என்பதும், மற்ற படங்களை போல ரிவைசிங் கமிட்டிக்கெல்லாம் போய்தான் சென்சார் சர்டிபிட்டிகேட் வாங்க வேண்டிய அவசியம் இப்படத்திற்கு ஏற்படவில்லை என்பதும், சங்கப்பலகையில் பொறிக்க வேண்டிய முக்கிய செய்தி.