லண்டனில் படிப்பு… இசைதான் பிழைப்பு
சென்னையை சேர்ந்தவரான பவன் லண்டனில் இஞ்சினியரிங்க் முடித்துவிட்டு இசை மேல் கொண்ட காதலால் இசையை முறையாக பயின்றார். தமிழ் படங்களில் பணியாற்ற விரும்பி மீண்டும் சென்னை வந்து வாய்ப்புகள் தேடியவர் இயக்குனர் கல்யான் அறிமுகத்தில் கதை சொல்லப் போறோம் படத்தில் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் தற்போது நகர்வலம், சினாமிகா ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். குட்டி(2001) தமிழ்படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குனர் ஜானகி விஸ்வநாதனின் புதிய படமா ஆழி திரைப்படதிற்கும் தற்போது இசையமைத்து வருகிறார். இப்படம் தமிழ் சினிமாவில் தனிப்பெயர் பெற்றுத்தரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
பெரிய படங்களில் வாய்ப்பு கிடத்தால் இசையின் புது வடிவங்களை முயன்று பணியாற்ற மிகுந்த ஆவலாக உள்ளார்.