அஜீத்தின் கொள்கைக்கு அநியாயத்துக்கு மரியாதை கொடுத்த ஜெ.?

தேர்தல் திருவிழா முடிந்தாலும் செண்டை மேள கச்சேரி முடிய இன்னும் சில காலம் ஆகும் போலிருக்கிறது. 6 வது முறையாக முதல்வராக பதவியேற்றுக் கொள்ளும் ஜெ.வை வாழ்த்த திரையுலகம் க்யூ கட்டி நிற்கிறது. அம்மா… தேவை ஒரே ஒரு அப்பாயினிட்மென்ட் என்று சினிமா சங்கங்கள் அத்தனையும் கடிதம் கொடுத்துவிட்டு காத்துக் கிடக்கின்றன. அது ஒருபுறமிருக்க, முதல்வர் பொறுப்பேற்றுக் கொள்ளும் அந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ரஜினி, கமல், இளையராஜா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டிருந்தன.

ஆனால் ரஜினி கமல் வராவிட்டாலும், விஷால் சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் வந்திருந்தார்கள். இங்குதான் ஒரு டவுட். அரசியலில் எப்பவும் அம்மாவுக்கு சப்போர்ட் என்று பொதுமக்களால் நம்பப்படும் அஜீத்துக்கு அழைப்பிதழ் போனதா இல்லையா?

நமக்கு கிடைத்த தகவலின்படி அவருக்கு அழைப்பிதழே செல்லவில்லையாம். பொதுவாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிற வழக்கம் அஜீத்திற்கு இல்லை என்பது கோட்டை வரைக்கும் எட்டியிருக்கிறதே? எதற்கு அவருக்கு தர்ம சங்கடத்தை கொடுப்பானேன் என்று நினைத்திருக்கலாம்.

அந்த வகையில் அஜீத்தண்ணே… உங்க குரல் வெயிட்டுதான்!

3 Comments
  1. Vijay says

    Dei invitation kudukura alavuku ajith peirya appatakkaru illada.. athanala than JJ chumma vittutanga… Nengala yen ipdi build up thareenga.. vanguna kasuku koovureenga

    1. Roja says

      Yer over build up. I don’t do whether ajith pay for media. Most media over buildup

  2. Roja says

    Cinema 100 years ceremony ajith was there. Don’t lie.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
லண்டனில் படிப்பு… இசைதான் பிழைப்பு

சென்னையை சேர்ந்தவரான பவன் லண்டனில் இஞ்சினியரிங்க் முடித்துவிட்டு இசை மேல் கொண்ட காதலால் இசையை முறையாக பயின்றார். தமிழ் படங்களில் பணியாற்ற விரும்பி மீண்டும் சென்னை வந்து...

Close