பக்தி முற்றியது- கோவில் கோவிலாக சுற்றும் டைரக்டர் பாலா!
வேட்டி அவிழும்போதுதான் பெல்ட்டின் அருமையே புரியுது சிலருக்கு! தெய்வம் என்றால் அது தெய்வம். வெறும் கல் என்றால் அது கல்தான் என்கிற கண்ணதாசனின் தாட் ஒன்றுதான் கடவுள் இல்லை என்போருக்கும், இருக்கு என்போருக்குமான சிம்பிள் கோனார் கைட்!
பிரஸ்மீட்டிலோ, அல்லது தனியாகவோ நிருபர்களிடம் பேசும் போது தன்னை பழுத்த நாத்திகவாதியாக காட்டிக் கொள்வது பாலாவின் பழக்க வழக்கங்களில் ஒன்று. “உழைக்கறதெல்லாம் நான். சும்மா கிடக்கிற கடவுளுக்கு ஏன் நன்றி சொல்லணும்?” என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பளிச்சென்று கேட்டவர் பாலா. ‘அப்படின்னா… அவருக்கு பிள்ளையார் முருகன் மட்டுமல்ல, இயேசு அல்லா கூட இல்லவே இல்ல போலிருக்கு’ என்று கரையொதுங்கி விடுவார்கள் நிருபர்கள். ரைட்… இப்ப என்னய்யா ஆச்சு?
காலம் போட்டு புரட்டிய புரட்டலில் கடவுளே கதி என்றாகிவிட்டாராம் பாலா. கடந்த சில தினங்களுக்கு முன் கோவில் நகரமான கும்பகோணம் பகுதிக்கு ரகசிய விசிட் அடித்த பாலா, ஊர் விழிக்கும் முன் சில முக்கிய கோவில்களுக்கு சென்று, சாமி தரிசனம் செய்துவிட்டு வந்திருக்கிறார்.
பரமனே கதி என்று வந்த பக்தனுக்கு, இல்லேன்னு சொல்லாம எடுத்துக் கொடு ஆண்டவனே…
To listen audio click below:-