ஆர்மோனிய பெட்டிக்குள் ஒரு ‘ஹார்மோனிய ’ கசமுசா? சிக்கும் முன்னணி இசையமைப்பாளர்கள்

தேவி ஸ்ரீ பிரசாத், அனிருத், விஜய் ஆன்ட்டனி இம்மூவருக்குமான பார்வை ஒரே நேர்க்கோட்டில் இருப்பதுதான் இப்போது ஊரே சேர்ந்து உற்று கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது!

தெலுங்கை பொறுத்தவரை தேவி ஸ்ரீ பிரசாத்துதான் சூப்பர் மியூசிக் ஸ்டார். அங்கே இவர் உருட்டும் தட்டு முட்டு சப்தங்களுக்கு செவிகளை நேர்ந்து விட்டிருக்கிறார்கள் ரசிகர்கள். ஆளும் பார்க்க சுமாராக இருப்பதால், அங்கிருக்கும் நடிகைகளுக்கு இவர் மீது ஒரே கிரேஸ். அவருடன் இணைத்து கிசுகிசு வந்தால் கூட ஓ.கே என்கிற அளவுக்கு தேவியுடன் பப்புகளில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். இவரும் அதில் நல்ல பீஸ் எது என்று பார்த்து தேர்ந்தெடுத்து அவர்களை பாடவும் வைக்கிறார். ‘கலையை கண்ணா பின்னான்னு பார்க்கிற வழக்கம் எங்களுக்கு இல்லே’ என்று அவர் சமாதானம் கூறினாலும், இவருடன் நடிகைகள் சுற்றுவதை அவ்வப்போது போட்டோ எடுத்து பப்ளிஷ் பண்ணி வருகிறார்கள் அங்கே.

அனிருத் கதையை கேட்கவே வேண்டாம். ஆன்ட்ரியாவை தன் இசையில் பாட வைக்கிறேன் என்று உதட்டுக்கு மட்டும் தனி பயிற்சி கொடுத்ததை நாடே அறியும். ஆன்ட்ரியாவை தொடர்ந்து கமல் பேமிலியிலேயே கண் வைத்த அனிருத், ஸ்ருதியையும் ஒரு பாடலை பாட வைத்திருக்கிறார். நல்லவேளை, பாட்டோடு நிற்கிறது பிரண்ட்ஷிப். அது அதையும் தாண்டுமா என்பதை இப்போதே யாரும் உறுதியிட்டு அறுதியிட்டு கூற முடியாதல்லவா?

விஜய் ஆன்ட்டனி ஸ்டோரி மேற்படி இசையமைப்பாளர்களுக்கு சளைத்ததல்ல. ‘மியூசிக் பண்ணுறது புடிக்கவே இல்லை’ என்று ஓப்பனாகவே போட்டு உடைத்துவிட்டார் அவர். ‘நடிக்கறதுதான் ஈஸி. அதிலும் நடிகைகளுடன் ஈஸியா பழக முடியறதுக்கு காரணம், இந்த ஹீரோ அவதாரம்தான். வெறும் மியூசிக் டைரக்டர்னா முடியுமா?’ என்கிறார் அவரே. இப்படி ஆர்மோனிய பொட்டியில் கை வைக்கும் அத்தனை பேருக்கும், ‘ஹார்மோனிய’ பொட்டியும் ஓப்பன் ஆகிவிட்டபடியால் காக்கை குரல் நங்கைகள் கூட, சினிமா பின்னணி பாடுகிற அளவுக்கு தேறி வருகிறார்கள்.

இந்த வரிசையில்தான் டி.இமானும் லட்சுமிமேனனை பாட வைக்கிறாரோ என்கிற சந்தேகம் வலுத்திருக்கிறது மீடியாவுக்கு. மேற்படி கதைகள் எல்லாவற்றையும் அவரிடம் கூறி, ‘அவங்களை போலதானா நீங்களும்?’ என்றொரு நிருபர் கேட்டு வைக்க, வேர்த்து விறுவிறுத்து போனாராம் அவர். ‘சார்… நடிகைகளை பாட வைக்கிறதுல இப்படியெல்லாம் ரிஸ்க் இருக்கா?’ என்று அலற ஆரம்பித்துவிட்டாராம்.

நோக்கம் தப்பாயில்லேன்னாலும், ஊரோட தாக்கம் தப்பாயிருக்கே சார்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஷங்கர் அழைத்தது எதற்காக? கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 06 ஆர்.எஸ்.அந்தணன்

என்னுடைய நண்பர் ஒருவர், தனது நெருங்கிய உறவினரை எனக்கு அறிமுகப்படுத்தி, ‘இவனுக்கு சினிமான்னா உசுரு. யார்ட்டயாவது அசிஸ்டென்ட்டா சேர்த்து விடுங்களேன்’ என்றார். பையன் பார்க்கதான் ஸ்மார்ட். மண்டையில்...

Close