எதையும் தாங்குவேன் தங்கைக்காக! அஜீத் ஆவேசம்!

அஜீத்துக்கு ஏதுப்பா தங்கச்சி? என்று அதிர்ச்சியாவார்கள் ரசிகர்கள். அஜீத் போன்ற மாஸ் ஹீரோக்களுக்கு மனைவியை தவிர மற்றவங்க எல்லாரும் அக்கா தங்கச்சிங்கதான்! ஆனால் நாம் சொல்ல வந்த விஷயமே வேற…

வேதாளம் படத்தின் டீசர் பார்த்தவர்கள் ஓரளவுக்கு யூகித்திருப்பார்கள். அஜீத் உடம்புக்குள் ஆவி புகுந்திருப்பதை! ஆவி படக்கதை சீசன் இது. இந்த ஆவி அல்டிமேட் அஜீத்தை மட்டும் விட்டுவிடுமா என்ன? கண்ணாமூச்சி ரே ரே… என்று அச்சுறுத்த வைத்திருக்கிறது. செம மிரட்டலாக வந்திருக்கும் டீசரே படம் எப்போ வரும் என்ற ஆவலை தூண்ட, படத்தின் ஒன் லைன் கேட்டால் இப்பவே இப்பவே… என்று ஆர்வம் பிய்த்து தின்கிறது.

தன் தங்கையுடன் அன்பும் சந்தோஷமுமாக வேறொரு மாநிலத்தில் வசித்து வரும் அஜீத்துக்கு சென்னையில் வேறொரு முகம்! கிட்டதட்ட பாட்ஷா மாதிரி போகிறது கதை. அந்த ஆவி? அது வேறு யாருமல்ல! அஜீத்தின் தங்கை லட்சுமிமேனனுடையது. அண்ணன் மீது பாச பாசமாக இருக்கும் லட்சுமிமேனன் கொலை செய்யப்படுகிறார். பின்பு ஆவி வடிவத்தில் அண்ணன் உடம்பில் புகுந்து கொள்கிறார். அதற்கப்புறம் நடக்கும் அதிரிபுதிரிதான் க்ளைமாக்ஸ் என்கிறார்கள்.

அஜீத் சும்மா வந்து நின்றாலே நரம்பை முறுக்கி கொள்வார்கள் அவரது ரசிகர்கள். அவரே நரம்பை முறுக்கிக் கொண்டு நின்றால்?

Read previous post:
பேட்டியிலிருந்து பிறந்த ஷார்ட் பிலிம்! அசந்து போன ஆர்யா, விஷால்!

‘கடைசியில எங்கிட்டேயிருந்து சுட்டதுதானா இது?’ என்று விஷால் கேட்டிருந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. ஏனென்றால் விஷாலை பேட்டியெடுக்கப் போன ஒரு நிருபர், அவர் சொன்ன பதிலில் இருந்தே ஒரு கதையை...

Close