கண்டுக்காம விட்டது தப்பா போச்சு! பீல் பண்ணிய கவுதம் கார்த்திக்
கார்த்திக் பேமிலியில் மூன்றாம் தலைமுறை ஹீரோ கவுதம் கார்த்திக். ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிற வசதி கொண்ட பிரிட்டிஷ் ஸ்கூலில் அடைக்கப்பட்ட ஒரே காரணத்தால், தாத்தா முத்துராமன் நடித்த தமிழ் படங்களையும், அப்பா கார்த்திக் நடித்த காதல் படங்களையும் இப்போதுதான் பரிட்சைக்கு ஸ்டடி லீவ் விட்டது போல பார்த்துக் கொண்டிருக்கிறாராம். பிரிட்டிஷ் ஸ்கூலில் படிச்சா இவங்க படத்தையெல்லாம் பார்க்கக் கூடாதா? அதற்கு அவரே பதிலையும் சொன்னார். “அங்கே சினிமாவுக்கு கூட்டிட்டு போனாக் கூட இங்கிலீஷ் படத்துக்குதான் கூட்டிட்டு போவாங்க! ”
சினிமா குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும், இப்போதுதான் சினிமா பழகுகிறார் கவுதம். வெறும் நடிக்கறதோட நம்ம வேலை முடிஞ்சுதுன்னு இருந்திட்டேன். நம்மள பற்றி வர்ற கிசுகிசுவுக்கு கூட முறையா பதில் சொல்லணும்னு தெரியாம போச்சு. என்னையும் ப்ரியா ஆனந்தையும் சேர்த்து வச்சு எழுதிட்டாங்க. அதுல பெரிய ரகசியமெல்லாம் இல்ல. நான் கோ எஜிகேஷன்ல படிச்சவன். அதனால் என்னை சுற்றி எப்பவும் தோழிகள் இருப்பாங்க. அதைதான் தவறா புரிஞ்சுகிட்டு எழுதிட்டாங்க. இப்ப சொல்றேன். நான் லவ் மேரேஜ்தான் பண்ணிப்பேன். அது ப்ரியா ஆனந்த் இல்ல என்றார் கவுதம் கார்த்திக்.
ஒருவேளை அவங்க மேல காதல் வந்தால்?
அதுக்கென்ன… அவங்களையே கல்யாணம் பண்ணிட்டு போறேன்!
அட… இருபது மார்க் கொஸ்ட்டீனுக்கு இவ்வளவு சிம்பிளா பதில் சொல்லிடுச்சே குழந்தே?
https://youtu.be/W1Hk8mKUGT4