ஆனந்தராஜுக்கு அலை இருக்கா? மரகத நாணயம் சொல்லும் ரகசியம்!
அதிமுக வை பொறுத்தவரை அலை அடிக்குதா, இலை இடிக்குதா, தெரியாது. ஆனால் அக்கட்சியின் முன்னாள் பிரமுகர் ஆனந்தராஜ் வாழ்க்கையில் பேரலையும் பெருமகிழ்ச்சியும் அடிக்க ஆரம்பித்து அநேக நாளாச்சு. ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ஆரம்பித்த அந்த அலை, ஊருக்கே சிரிப்புக் காட்டும் காமெடி அலை.
அதற்கப்புறம் அவர் எது சொன்னாலும் சிரிக்க ஆரம்பித்தது உலகம். கட்சி விஷயத்தில் சீரியசாக பேசினால் கூட, போங்க சார்… நீங்க எப்பவும் இப்படிதான் என்கிற அளவுக்கு போய் கொண்டிருக்கிறது அது. இந்த நேரத்தில்தான் அவரது வில்லனிக் பிளஸ் காமெடி இமேஜுக்கு மேலும் மெருகு சேர்க்க வரப்போகிறது ‘மரகத நாணயம்’.
பொதுவாக சென்சார் அலுவலகத்திற்கு படம் போனால், சிங்கத்தை மென்று தின்றுவிட்டு, சிறுத்தைக்கு காத்திருப்பது போலவே முகத்தை வைத்திருப்பார்கள். முதன் முறையாக விழுந்து விழுந்து சிரித்தார்களாம் அங்கே. “ஒரு ‘கட்’ கூட கிடையாது. ‘யு’ வாங்கிட்டு போங்க” என்று வாழ்த்திய அதிகாரி, படத்தின் இயக்குனர் ஏஆர்கே சரவணையும் அழைத்து பாராட்டி அனுப்பினாராம்.
கவலையை மறக்க, குடும்பத்தோடு வாங்க என்று அழைக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் டில்லிபாபு! சிரிக்க மறந்தவர்கள் சிரிக்காமலேயே கிளம்புங்க… தியேட்டர்ல போய் பார்த்துக்கலாம் மற்றதை!
சென்சார் பாராட்டிய படம் என்று நீங்கதான் பெருமைப்பட்டுக்கணும்.
முதலில் அடாவடி, அராஜகப் பேர்வழி சென்சாருக்கு லாடம் கட்டி வரைமுறைப் படுத்தினால்தான் சினிமா நல்லாயிருக்கும்.
…கஸாலி