சிக்குனா மொட்டைதான்! கதற விடும் கவுதம்மேனன்!

எந்த நேரத்தில் சொந்தப்படம் எடுக்கக் கிளம்பினாரோ, அந்த நேரத்திலிருந்தே தலை வேறு, மொட்டை வேறு என்று பிரிக்க முடியாத அளவுக்கு போட (?) ஆரம்பித்துவிட்டார் கவுதம் மேனன். அதுவும் சமீபகாலமாக அவர் வைத்திருக்கும் சம்பள பாக்கிக்காக ‘பாத யாத்திரை’ மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறது ஒரு பெரும் கூட்டம்.

சாதாரண பெப்ஸி தொழிலாளர்களில் துவங்கி, படத்தின் டாப் டெக்னீஷியன் வரை அத்தனை பேரும் சம்பள பாக்கியாம். அழுத்தி அழுத்திக் கேட்டால், அடுத்த படத்தில் வாய்ப்பே இல்லை என்கிற அளவுக்கு தண்டனை கொடுப்பதால், பாதி பேர் வந்த வரைக்கும் நிம்மதி. வரலேன்னாலும் தொழில் கிடைக்குதே என்ற நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்களாம்

அவ்வளவு பிஸியான ஷெட்யூலுக்கு நடுவிலும் மியூசிக் போட்டுக் கொடுத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கே இன்னும் இழுபறிதானாம். முன்னதாக ஹாரிஸ் ஜெயராஜிற்கு பெரும் மொட்டை. ஒளிப்பதிவாளர்கள் பாடு இன்னும் திண்டாட்டம். நான்தான் தம்பி உன்னை அறிமுகப்படுத்தினேன் என்று சொல்லி சொல்லியே ஒருவரை தவிக்க விட்டாராம் கவுதம். அவரோ, வேணும்னா என் பெயரை பயன்படுத்திக்கோங்க. இனிமே நான் ஸ்பாட்டுக்கு வர்றதா இல்ல என்று ஒதுங்கிக் கொள்ள, ஒழுங்கான கேமிராமேன் இல்லேன்னா நாங்க எப்படி முகம் காட்றது என்று ஷுட்டிங்குக்கு மட்டம் போடுகிறார்களாம் ஹீரோக்கள்.

‘இத்தனைக்கும் கவுதம் மேனன் படங்கள் நல்லாதான் ஓடுது. அப்பறம் ஏன் இப்படி அழிச்சாட்டியும் பண்றாரு?’ என்று கதறுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.

கழுகோட வேலை கவ்வுறது… எலியோட வேலை பம்முறது!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நாகரீக அரசியலை நோக்கி தமிழகம்! கங்கிராட்ஸ் கமல் சார்!

Close