போட்டோ ஷாப் அஜீத்? நல்லா ஓட்றாய்ங்க!

இந்தியா விண்ணில் ஏவுகிற ராக்கெட்டுக்கு கூட இவ்வளவு ஆர்ப்பாட்டம் நடந்ததில்லை. ஒரே ஒரு போட்டோ… அதுவும் நிஜமாக எடுத்ததா, அல்லது போட்டோ ஷாப்பா என்று ஆயிரம் சந்தேகங்களை கிளப்புகிறது. அதை வெளியிடுவதற்குள் ஏன்யா இவ்ளோ களேபரம்? இந்த போட்டோவை ராத்திரி 12 மணிக்கு வெளியிட்டால்தான் கண்ணுக்கு புலப்படுமா? பத்து மணிக்கு ரிலீஸ் பண்ணினால், யார் கண்ணுக்கும் தெரியாதா? என்றெல்லாம் கவுண்டமணி வாய்சில் கட்டி ஏறுகிற திருவாளர் பொதுசனம், அவ்வளவு ஆர்ப்பாட்டமாக வெளியிடப்பட்ட அந்த ஸ்டில்லை பார்த்ததும் மாரியம்மன் கோவில் சாம்பிராணியை வெளுக்க வெளுக்க அடித்தால்தான் மயக்கம் தெளிகிற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

விவேகம் என்ற தலைப்பிடப்பட்டிருக்கும் அஜீத்தின் 57 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஒரு பாடி பில்டர் உடம்பில் அஜீத்தின் தலையை ஒட்ட வைத்த எபெக்டிலேயே இருக்கிறது. வெள்ளை வெளேர் என்று இருக்கும் அஜீத்தின் பாடி கலர், இந்தப்படத்தில் காபி டிகாஷனில் விழுந்த மாதிரி இருப்பதுதான் முதல் உறுத்தல். அதற்கப்புறம் உன்னிப்பாக கவனித்தால, அந்த உடம்பு அஜீத்தினுடையதே இல்லை என்பதும் பளிச்சென தெரிகிறது.

மோடி மஸ்தான் வித்தைக்கும் இந்த ஸ்டில்லுக்கும் அதிக வித்தியாசமில்லை. எப்படியோ… ரசிகனை ஆட்டு மந்தைகளாக்கி அசருகிற நேரத்தில் மட்டன் பாயா பண்ணுவதே சிலருக்கு வேலை. இந்த வித்தையில் அஜீத் ஒவ்வொரு வருஷமும் நன்றாக முன்னேறி வருகிறார் என்பதுதான் இளிச்ச வாய் சமாச்சாரம்!

ஸ்டில் வெளியான நிமிஷத்திலிருந்தே விஜய் ரசிகர்கள் படு பயங்கரமாக அஜீத்தை ஓட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அவரே வந்து அது நான்தான் என்று முறுக்கேறினால் ஒழிய இந்த சந்தேகத்திற்கு வால் நீண்டு கொண்டேதான் இருக்கும்!

5 Comments
  1. Roja says

    Ean ippa ungalukku ajith pakkam irunthu kasu varalaya

  2. Rajesh says

    Is Ajith stopped paying you?

  3. thalapathy says

    nalla “cover” pandraagappa

  4. அரவிந்த் says

    100% போட்டோ ஷாப்

  5. Naty says

    Cheap publicity, can’t expect this from the Professional editor Ra. S. A.

    What makes you think like that. Can you prove it.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
LetsGoParty – Mupparimanam Promo Song -Video

Close