சாவுங்கடா…
சிம்புவின் டேஷ் பாடலுக்காக தமிழகத்தின் எல்லா மூலையிலிருந்தும் எதிர்ப்புகள் குவிந்துவிட்டன. இதுவரை எட்டு வழக்குகள் சிம்பு அனிருத் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று பத்திரிகையாளர் பிஸ்மி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருவர் மீதும் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதையும் சேர்த்து ஒன்பது. அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்த பிரச்சனையை நாடு தழுவிய பிரச்சனையாக எடுத்துக்கொண்டு களம் இறங்கியிருக்கிறது. திரும்புகிற திசையெல்லாம் இது பற்றிய விவாதங்கள்தான். இந்த நிலையிலும் கூட, தன் செயலுக்காக துளி வருத்தம் கூட தெரிவிக்காமல் பிடிவாதமாக இருக்கிறார் சிம்பு.
பெத்த மனம் பித்து. பிள்ளை மனம் கல்லு என்பதை போல, சிம்புவின் அப்பா டிஆர், எப்படியாவது பிரச்சனையை முடிச்சுடலாம். ஒரு மன்னிப்பு கேள்றா… என்கிறாராம். அவர் சொல்வதை கேட்டிருந்தால்தான் சிம்பு இந்நேரம் விஜய் அஜீத் ஆகியிருக்கலாமே?
இதற்கிடையில் தினந்தோறும் தன் வீட்டு வாசலில் போராடி வரும் தாய்குலங்களை மிரட்டுவதற்காக சிம்பு எடுத்த ஸ்டெப் மிகக் கேவலமானது. தன்னுடைய ரசிகர்களை வரவழைத்து அதே வீட்டின் முன் ‘டிராமா’ செய்ய ஆரம்பித்திருக்கிறார். இன்று நான்கு விசிலடிச்சான் குஞ்சுகள் சிம்புவுக்கு ஆதரவாக தீக்குளிக்க முயன்றார்களாம். அதில் ஒரு குஞ்சு சிம்புவின் அப்பா டிஆரின் சொந்த ஊரான மாயவரத்தை சேர்ந்தவர். இதே மாயவரத்தில்தான் சில தினங்களுக்கு முன் சிம்புவின் கொடும்பாவியை எரித்த சம்பவமும் நடந்தது.
தன் ஆதர்ஷ ஹீரோ நடித்த படத்திற்கு டிக்கெட் கிடைக்கல என்பதற்காக தூக்கு மாட்டி செத்தவன், கட் அவுட்டுக்கு பால் ஊற்ற முடியலையேங்கற ஏக்கத்துல பூச்சி மருந்தை குடிச்சவன், குடும்பத்தை நிர்கதியா விட்டுட்டு தலைவனுக்காக தீக்குளிச்சவன் வரிசையில்தான் இந்த நான்கு பேர்…. பொறுப்பற்ற போலீஸ், “சாவுங்கடா” என்று விட்டிருக்கலாம். தமிழ் சமூகத்தின் கெட்டவேளை… தடுத்துவிட்டார்கள்!
சிம்பு மன்னிப்பு கேட்கிற வரைக்கும் நாட்டில் பிரச்சனையை ஓயாது போலிருக்கிறது. எரிச்சுக்கறதுக்கு சீமெண்ணை தேவைன்னா சொல்லியனுப்புங்க லட்சியவாதிகளான விசிலடிச்சான் குஞ்சுகளே…
தயவு செய்து சொம்புவின் ரசிகர்கள் தீ குளிக்கட்டும்
அவர்களை யாரும் தடுக்க வேண்டாம்