கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையால் கவுதம் மேனன் பேமிலி ஆனந்த கண்ணீர்! வொய்? வொய்?

இன்று உலகத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கிறார் சுந்தர் பிச்சை! பிரதமர் மோடியின் வாழ்த்து, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்த்து, கொட்டாம்பட்டி கோவாலுவின் வாழ்த்து, சட்டாம்பிள்ளை சங்கரனின் வாழ்த்து என்று பெருசும், சிறிசுமாக பொக்கேக்களால் சூழ்ந்திருக்கிறது அவரது உலகம்.

அவரது சம்பளம் எவ்வளவு இருக்கும் என்று விவாதிக்கும் பலர், கோடி மில்லியன் என்று தனிக்கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழனனின் கொடியை ஒரேயடியாக உயர உயர பறக்கவிட்ட அந்த இளைஞர், சென்னையில் படித்தவர். அதுவும் அசோக் நகரிலிருக்கும் ஜவஹர் வித்யாலயாவில் படித்தவர். இந்த தகவல்களுக்கும் டைரக்டர் கவுதம் மேனன் பேமிலிக்கும் என்ன சம்பந்தம்?

அங்குதான் ட்விஸ்ட்! மேற்படி ஜவஹர் வித்யாலயாவின் பிரின்ஸி மேம் வேறு யாருமல்ல, நம்ம டைரக்டர் கவுதம் மேனனின் அம்மா! சுந்தர் பிச்சைக்கு பலமுறை பரிசுகளை வாரி வழங்கியவர் அவர். இன்று கூகுளின் செயல் தலைவர் ஆகியிருக்கும் அவரது உயரத்தை எண்ணி எண்ணி சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறதாம் இவரது குடும்பம். சென்னைக்கு வந்தால் பிரின்ஸிகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு போங்க சுந்தர்!

பின் குறிப்பு- மேற்படி செய்தியை இந்த உலகத்திற்கு வழங்கியிருப்பது உங்கள் newtamilcinema.in. காப்பி பேஸ்ட் சோம்பேறிகள் இந்த பகுதியை மட்டும் வெட்டியெறிந்துவிட்டு பயன்படுத்தவும்!

Read previous post:
தனுஷும் அந்த நால்வரும்…! எல்லை தாண்டிய தொல்லையாம்ல?

“மலை ஆட்டை கொடுத்தா கூட சொளையா உரிச்சு தின்ருவாய்ங்க போலிருக்கு... தின்னட்டும் தின்னட்டும். ஆனால் அவங்களையெல்லாம் அழைச்சுட்டு வர்ற தம்பி ரெண்டு இட்லிக்கு மேல தொட மாட்டேங்குது..’‘....

Close