இளைத்துப்போன புருஸ்லீ களைத்துப்போன ஜி.வி.பி மார்க்கெட்!
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் தயாரிப்பாளருக்கு மட்டும் பதினெட்டு கோடி லாபம் என்றெல்லாம் அப்போது பேசப்பட்டது. அந்த புகழுரைகளால் மார்க்கெட் தழைத்து மங்காத சுறுசுறுப்போடு ஓட ஆரம்பித்தார் அப்படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ். அந்தோ பரிதாபம். அதற்கப்புறம் வந்த ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படுதோல்வியிலும் பெருந்தோல்வி. எட்டு கோடிக்கு பிசினஸ் செய்தார்களாம். ஆனால் நாலு கோடி கூட வசூல் இல்லை.
இப்போது அவரை நம்பி எடுக்கப்பட்ட புரூஸ்லீ, கடவுள் இருக்கான் கொமாரு ஆகிய இரண்டு படங்களுக்குமே விநியோகஸ்தர்கள் இல்லை. மொத்தமாக படத்தை வாங்கி வெளியிடும் சிலரை அணுகிய புரூஸ்லீக்கு பெருத்த ஏமாற்றம். ஏன்? அமிஞ்சிக்கரை முதல் அண்டார்டிகா வரைக்குமான வியாபார ரைட்சை மொத்தம் சேர்த்து மூன்று கோடிக்குக் கேட்கிறார்களாம். ஆனால் தயாரித்த விதத்திலேயே எட்டு கோடியை கிராஸ் பண்ணிவிட்டான் புரூஸ்லீ. அப்புறம் எப்படி கொடுப்பதாம்?
இந்த நஷ்ட கஷ்ட நிலவரம் எதுவும் அறியாத ஜி.வி. மட்டும், ட்விட்டருக்குள் வந்து அஜீத் ரசிகர்களையும், ரஜினி ரசிகர்களையும் அநியாயத்துக்கு அசால்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார். தம்பி ஸ்டேஷன் வந்திருச்சு. இறங்கிக்கீங்க…