நான் வளைச்சா கம்பி நீ வளைச்சா புல்லு! முரண்டு பிடிக்கும் ஹரி!

“படம் பண்ணலாமா? சரி…” என்று தயாரிப்பாளர் சொல்லி முடிப்பதற்குள், அப்படத்தை முடித்தே கொடுத்துவிடுவார் ஹரி. அந்தளவுக்கு ஸ்பீட் ஸ்பீட்! அத்தகைய அசகாய சூரனையும், ஆமை சூப் கொடுத்து உட்கார வைத்துவிட்டது காலம். என்னாச்சு? என்னாச்சு? அவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் சிங்கம் 3 படப்பிடிப்பு நகராமல் அப்படியே நிற்கிறது. எல்லாம் பட்ஜெட் பிரச்சனைதான்.

சூர்யாவின் 24 படத்தாலும், அதற்கப்புறம் வந்த இறைவி படத்தாலும் சிங்கம் 3 படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு பலத்த நஷ்டம். அதனால், “இந்த படத்தின் பட்ஜெட்டை பெருமளவு குறைங்க. பாரின் ஷுட்டிங்கெல்லாம் வேண்டாம். இங்கேயே படத்தை முடிங்க” என்கிறாராம் அவர். ஒரு நேர்க்கோட்டை போட்டுவிட்டால், இந்தப்பக்கம் அந்தப்பக்கம் தலையை திருப்பி பழக்கப்படாத ஹரி, “இது சரியில்லங்க” என்று முரண்டு பிடிக்கிறாராம்.

இதே தயாரிப்பாளர்தான் இப்படத்தின் கதை விவாதத்தையே “நீங்க நினைச்ச நாட்ல வச்சுக்கோங்க” என்று உலக மேப்பை எடுத்துப் போட்டு ஊர்பட்ட சுதந்திரம் கொடுத்தவர். அவர் சொன்னது போலவே ஏதோ ஒரு நாட்டுக்கு தன் உதவி இயக்குனர்கள் குழுவோடு போய் கதை பண்ணிக் கொண்டு வந்தார் ஹரி. இப்போது தயாரிப்பாளருக்கு கஷ்டம்னு வந்துட்டா வளைஞ்சுப் போறதுதானே நல்லது? இது புரியாத ஹரி, ‘நான் வளைச்சா கம்பி. நீ வளைச்சா புல்லு’ன்னு ஏன் முரண்டு பிடிக்கிறார்?

தமிழ்சினிமா விசித்திரமானது. அதைவிட விசித்திரமானவர்கள் இந்த ஈகோ பிடித்த இயக்குனர்கள்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இளைத்துப்போன புருஸ்லீ களைத்துப்போன ஜி.வி.பி மார்க்கெட்!

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் தயாரிப்பாளருக்கு மட்டும் பதினெட்டு கோடி லாபம் என்றெல்லாம் அப்போது பேசப்பட்டது. அந்த புகழுரைகளால் மார்க்கெட் தழைத்து மங்காத சுறுசுறுப்போடு ஓட ஆரம்பித்தார்...

Close