நோ ரிப்பீட்! ஹன்சிகா அப்பீட்!!

கிட்டதட்ட ஒன்றரை கோடி சம்பளம் வாங்குகிறார் ஹன்சிகா. ஆனால் மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானபோது என்ன சம்பளம் கொடுத்தீங்களோ, அதுவே போதும் என்று பரந்த மனசுடன் நடிக்க ஒப்புக் கொண்டாராம் மீகாமன் படத்தில். ஏன்? இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜபக்தான் மாப்பிள்ளையில் ஹன்சிகாவை அறிமுகப்படுத்தியவர். இந்த கர்ட்டஸி காரணமாக தனது சம்பளத்தை பெருமளவு குறைத்துக் கொண்ட ஹன்சிகாவுக்கு படத்தின் அனுபவம் எப்படி?

விளக்கெண்ணையில வெந்தயத்தை போட்டு குடித்த மாதிரி அப்படியொரு அவஸ்தையாம். பல்வேறு சிரமங்களை பொறுத்துக் கொண்டு நடித்தாலும், படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட டப்பிங் குரலும், படம் முழுக்க வரவிடாமல் ஏதோ அங்கு கொஞ்சம், இங்கு கொஞ்சமாக வந்த கவலையும் இன்னும் போகவில்லையாம் அவருக்கு. இந்த நேரத்தில்தான் மீண்டும் இதே டீமுக்கு கால்ஷீட் தந்திருக்கிறார் ஆர்யா. அதே இயக்குனரான மகிழ் திருமேனி இயக்குவார் என்று முடிவெடுத்த பின், அதே ஹீரோயின் இன்னும் நன்றாக இருக்கும் என்று ஆர்யா நினைத்திருப்பார்தானே?

ஹன்சிகாவை அணுகினார்களாம். ‘நோ ரிப்பீட். போதும்ப்பா உங்க சகவாசம்’ என்றாராம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வடசென்னை குழந்தைகளுக்காக நடைபெறும் ‘டாய்ஸ் ட்ரைவ்’..!

அரசு சாராத அமைப்பாக இருந்துகொண்டு சமூகத்தில் பொதுமக்களுக்கான தன்னாலான பங்களிப்பை செய்து வருகிறது ஜீவன் பவுண்டேஷன் அமைப்பு. பகிர்ந்தளிப்பதில் மிகப்பெரிய விஷயம் தங்களது மகிழ்ச்சியை அடுத்தவருக்கும் பகிர்ந்தளிப்பது...

Close