விஜய் படம்னு நினைச்சேன்! ஆனால்? ஹாரிஸ் ஜெயராஜை கவலைப்பட வைத்த பேமிலி!
பஞ்சாமிர்தம் தர்றேன்னு கைய நீட்ட சொல்லிட்டு, பஞ்சு மிட்டாய் கொடுத்தால் என்னாகும்? அப்படியொரு ஏமாற்றத்திலிருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். சும்மாவா பின்னே? விஜய் படத்திற்கு மியூசிக் போடணும் என்று சொல்லி அட்வான்ஸ் கொடுத்தாராம் நடிகர் பிரபு. இவர்களது சொந்த நிறுவனமான சிவாஜி புரடக்ஷன்ஸ்சில் விஜய் நடிப்பதாக ஒரு பேச்சு இருந்ததல்லவா? அந்த படத்தை கூட செல்வராகவன் இயக்கப் போவதாக கூட சொன்னார்களே… அதே படத்திற்குதான் இந்த அட்வான்ஸ்.
பூட்டே திறக்கல. அதற்குள் ஆளே வீட்டுக்குள் நுழைஞ்ச மாதிரி முந்திரிக் கொட்டை அட்வான்சுக்கு முழு மனதோடு கையை நீட்டினார் ஹாரிஸ். அதற்கப்புறம் நடந்ததெல்லாம் மோடி மஸ்தான் ஏமாற்றங்கள். சிவாஜி புரடக்ஷன்சுக்கு டாடா காட்டிவிட்டார் விஜய். செல்வராகவனுக்கும் பெப்பே சொல்லிவிட்டார். ஆனால் ஹாரிசுக்கு கொடுத்த அட்வான்ஸ் கொஞ்ச நஞ்சமல்ல. சுமார் முக்கால் கோடியாம். அப்படியே விட்டுவிட முடியாதே?
விஜய் இல்லேன்னா என்ன? நம்ம விக்ரம் பிரபு படத்துக்கு மியூசிக் போடுங்க என்று கூறிவிட்டாராம் பிரபு. இதில் பலத்த அப்செட் ஆகிக் கிடக்கிறார் ஹாரிஸ். வேறு வழியில்லாத நிலைமை. கதை சொல்லச் சொல்லுங்க. பிடிச்சிருந்தா பார்ப்போம் என்று கூறிய ஹாரிஸ், சிவாஜி புரடக்ஷ்ன்ஸ் அனுப்பி வைக்கிற இயக்குனர்களையெல்லாம் இழுத்துக்கோ பறிச்சிக்கோ என்று அவமதித்து அனுப்புகிறாராம்.
வேண்டாத வெங்காயம். வதக்குனாலும் குற்றம். நசுக்குனாலும் குற்றம்!
https://youtu.be/v9I4egq39Es