தள்ளிப்போகும் ஹீரோ வாய்ப்பு? இயக்குனர் ஆகிறார் விக்ரம் மகன் !
வாரிசு அரசியலில் விருப்பமில்லாதவர்கள் கூட, சில சினிமா வாரிசுகளை ‘வாங்க வாங்க…’ என்று வாயார அழைப்பார்கள். கலையுலகத்திற்கும் அரசியல் உலகத்திற்குமான அதிகபட்ச வித்தியாசமே இந்த வரவேற்பு சிந்தனைதான். அப்படி முதல் பார்வையிலேயே எல்லாரையும் கவர்ந்துவிட்டார் சீயான் விக்ரமின் மகன் துருவ்.
ஓப்பனிங் சரியில்லேன்னா, பினிஷிங் ரொம்ப மோசமாக இருக்கும் என்பதை இத்தனை வருஷ சினிமா அனுபவத்தில் புரிந்து கொள்ள முடியாதவரா விக்ரம்? அதனால் துருவ்வை ஷங்கர் அல்லது மணிரத்னம் படங்களில் மட்டுமே அறிமுகப்படுத்த வேண்டும் என்பதிலும் தீவிரமாக இருந்தார். ஆனால் ஷங்கரின் சினிமா பிசினஸ், பெரிய ஹீரோக்களுடன் இணைந்தாலொழிய அவர் செய்யும் செலவுகளுக்கு கட்டுப்படியாகாதல்லவா? அதனால் ஷங்கர் “பார்க்கலாம்…” என்று ஒற்றை வரியில் விவகாரத்தை முடித்துவிட, மணிரத்னத்தின் மன ஓட்டம் துருவ் பக்கம் திரும்புவதற்காக காத்திருக்கிறார் விக்ரம். (ஏன்… பாலாதான் விக்ரமுக்கு பிடிச்ச இயக்குனராச்சே, அவர் படத்தில் அறிமுகப்படுத்தலாமே என்றெல்லாம் கேள்வி கேட்டு, சிவ பூஜையில் கரடிய அவுத்துவிடாதீங்கப்பா)
நடுவில் துருவ் இயக்கிய குறும்படம் ஒன்று வெளியாகி அவருக்கு நல்லப் பெயரை ஏற்படுத்தி தந்ததுதான் இந்த விவகாரத்தின் அற்புத திருப்பம். ஹீரோ ஆவதற்காக காத்திருக்கும் காலத்தில், தானே ஒரு கமர்ஷியல் படத்தை இயக்கினால் என்ன என்று துருவ் நினைத்திருக்கிறாராம். முன்னணிக்கும் கீழே, சுமாருக்கும் மேலே லெவல் ஹீரோக்களில் யாரோ ஒருவர் நடிப்பில் அந்தப்படம் துவங்கப்படலாம்.
துருவ்வின் அப்பாதான் விக்ரம் என்கிற காலம் விரைவில் வரட்டும்… வாங்க வாங்க ஜுனியர் சீயான்!
To listen audio Click below :-