அருந்ததி… வாயை அடக்கு! தன் பட ஹீரோயின் மீதே கடும் கோபத்தில் டைரக்டர் கேபிள் சங்கர்
ஒரு படத்தின் நாயகி அவர் நடித்த படத்தை உயர்த்தி வைத்து பேசுவதற்கு எல்லா உரிமையும் உண்டு. ஆனால் அது மற்ற இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் ‘ஹர்ட்’ பண்ணாத வரைக்கும்! இதனால் எந்த இயக்குனர் ஹர்ட் ஆனார்? என்பதை பிறகு பார்ப்போம். பேசியது கிளி, அது உண்டாக்கிய வலி என்ன என்பது முதலில்.
அண்மையில் ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தின் பிரஸ்மீட் நடந்தது. இதில் பேசிய அப்படத்தின் நாயகி அருந்ததி, ‘இதுவரைக்கும் நான் நடிச்ச படத்திலேயே சொல்லிக்கிற மாதிரி பெரிய செட்டப்ல உருவான படம் இதுதான்’ என்றார். அப்படியென்றால் அவரை முதன் முதலில் அறிமுகப்படுத்திய இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் தற்போது அவருக்கு பெரிய சம்பளம் கொடுத்து நடிக்க வைத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் தயாரிப்பாளர் எல்லாம் ஒப்புக்கு சப்பாணிகளா? விரைவில் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் ‘தொட்டால் தொடரும்’ படத்தின் இயக்குனர் கேபிள் சங்கரின் காதை கடித்தோம். ‘என்ன சார்… உங்க ஹீரோயின் இப்படி உங்க படத்தையும் சேர்த்து காவு வாங்கிட்டாங்க?’
கேட்டதுதான் தாமதம். படபடவென பொறிய ஆரம்பித்தார் கேபிள்.
‘என்னாச்சுன்னு தெரியல. ஏன் அப்படி பேசினாங்கன்னும் புரியல. அவங்க சொல்ற படத்துல நாய்தான் ஹீரோ. அருந்ததி யாருக்கு ஜோடின்னு எனக்கு தெரியாது. அது மட்டுமல்ல, அந்த படத்தில் அவங்க கெஸ்ட் ரோல்தான் பண்ணுறாங்கன்னு நான் கேள்விப்பட்டேன். ஆனால் எங்க படத்துல அப்படியில்ல. படம் முழுக்க அவங்க வர்றாங்க. வெறும் பாட்டுக்கு மட்டும் வந்துட்டு போற ஹீரோயினா காட்டாம நல்ல ரோல் கொடுத்துருக்கேன். அவங்க சொல்ற மாதிரி எங்க தயாரிப்பாளர் சின்ன தயாரிப்பாளர் இல்ல. இதுக்கு முன்னாடி நாலைஞ்சு படங்கள் எடுத்தவர். இன்னும் நிறைய படங்களை தமிழில் தொடர்ந்து எடுக்கப் போகிறவர். இப்படி பொத்தாம் பொதுவா எடுத்தெறிஞ்சு பேசுறது எந்த ஹீரோயினுக்கும் அழகல்ல. அருந்ததி வாயை கட்டுப்படுத்திக்கணும்’ என்றார்.
அப்படியே ‘தொட்டால் தொடரும்’ பெருமைகள் பற்றியும் சில வார்த்தைகள் கூறி தன் கோபத்தை தணித்துக் கொண்டார். படத்திற்கு சென்சார் வாங்கிட்டோம். யூ சர்டிபிகேட்! வரிவிலக்கு ஷோ பார்த்த உறுப்பினர்கள், படத்தை வாயார பாராட்டினாங்க. இப்பவே படத்தின் ஹீரோ தமனுக்கு இரண்டு படம் சைன் ஆகியிருக்கு. இந்த படத்தை பார்த்த எங்க தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர், நெக்ஸ்ட் படத்திலும் இதே காம்பினேஷன் வேணும்னு எனக்கும் தமனுக்கும் அட்வான்ஸ் கொடுத்திருக்கார்.
அப்படிப்பட்ட படத்தைதான் அருந்ததி ஒண்ணும் புரியாமல் பின்னுக்கு தள்ளி வச்சு பேசியிருக்கார். அவரை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு போகிற படமே இதுதான் என்பது விரைவில் அவருக்கு புரியும். அப்ப இந்த சம்பவத்தை அவருக்கு நினைவுபடுத்துங்க. அது போதும் என்று முடித்துக் கொண்டார் கேபிள்.
ஒத்த ரோசா… இப்படி சிக்கிட்டியேம்மா…!