கபாலித் திருட்டுக்கு ஹைகோர்ட் குட்டு! திருட்டு இணையதளங்கள் முடக்கம்!
சில தினங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார் கபாலி தயாரிப்பாளர் தாணு. அதில், கபாலி வெளியாகும் நேரத்தில் முழு படத்தையும் திருட்டுத்தனமாக தங்களது இணையதளத்தில் பதிவேற்றும் செயலை தடுத்து நிறுத்தவும் அப்படி வெளியிடும் இணையதளங்களை முடக்கவும் வழி செய்யும் படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
அப்படி படத்தை வெளியிடும் இணையதளங்களை முடக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார் நீதிபதி கிருபாகரன். ஆனால் இதுபோன்ற திருட்டு வேலைகளில் ஈடுபடும் இணையதளங்கள் பெரும்பாலும் வெளிநாட்டை மையமாக கொண்டு இயக்குபவைதான். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அவர்கள் படத்தை வெளியிட்டாலும், இந்தியாவில் டவுன்லோடு செய்யும் வசதியை தடுக்க முடியும். இதை சைபர் க்ரைம் போலீசார் கவனித்துக் கொள்வார்கள்.
இந்த தீர்ப்பு கபாலிக்கு மட்டுமல்ல, எதிர்காலத்தில் திருட்டு விசிடியினால் அச்சம் கொள்ளும் எல்லா தயாரிப்பாளர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்றார் தாணு. நீதிபதிக்கும் தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்திருக்கிறார் அவர்.
Ithukkellam Udane theerppu. Ana Kolai valakkai 10 to 15 varusam iluppanuga?