எங்க அப்பா கட்சியில கூட நான் இல்ல! வரலட்சுமி காமெடி!

சிபிராஜின் திரையுலக பயணத்தில்(?) சத்யா ஒரு முக்கியமான படமாக இருக்கும். நடிப்பு… தோற்றம்… இரண்டிலும் சற்றே அல்ல, அதையும் தாண்டி முன்னேறியிருந்தார் அவர். எல்லாரும் நினைத்தது போலவே சத்யா திரைப்படம் போட்ட பணத்தை விட மூன்று மடங்கு லாபம்! (இப்படி சொன்னவர் சிபிராஜேதான்) விரைவில் கலெக்ஷன் ஆதாரங்களை மீடியாவுக்கு தெரிவிப்பதாக சொன்னார். சொன்ன இடம், சத்யா சக்சஸ் மீட்! அட… அட… அட…!

படத்தில் நடித்த ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார் இருவருமே ஸ்பாட்டில் ஆஜர் ஆகியிருந்தார்கள். கேள்வி நேரத்தில் சிக்கிக் கொண்டவர் வரலட்சுமிதான். நீங்க நடிச்ச விக்ரம் வேதாவும் ஹிட், சத்யாவும் ஹிட். ஆனால் இது ரெண்டிலும் நீங்க ஹீரோயின் இல்லையே? இது கேள்வி.

நீங்கள்லாம் மரத்தை சுற்றி டான்ஸ் ஆடுனாதான் ஹீரோயின்னு நினைக்கிறீங்க. அது இல்ல. படத்தில் பேசப்படுற கேரக்டர்ல நடிச்சு பேர் வாங்குறதுதான் முக்கியம். எனக்கு ஹீரோயின்ங்கற வார்த்தை மேலெல்லாம் நம்பிக்கை இல்ல. இப்படியொரு பதிலை வரலட்சுமி சொல்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லைதான். ஆனால் அதைவிட பெரிய குண்டை போட்டார் அடுத்த கேள்விக்கு.

சமீபத்துல துணை முதல்வரை போய் மீட் பண்ணினீங்க. நீங்க அரசியலுக்கு வரப்போறதாவும் ஒரு பேச்சிருக்கே?

அட… நீங்க வேற. எனக்கு அந்த ஆசையெல்லாம் கிடையவே கிடையாதுன்னு கிளியரா எழுதிருங்க. அவ்வளவு ஏன்? எங்க அப்பா கட்சியிலேயே நான் உறுப்பினர் இல்ல என்றார் தனக்கேயுரிய பளீர் பகீர் சிரிப்புடன்!

விடுங்க… விஷால் கட்சி ஆரம்பிச்ச பிறகு இதே கேள்வியை கேட்டு வைப்போம்…!

Read previous post:
சென்னை சர்வதேச சினிமா நேசிகளுக்கு தகவல் தர வந்துவிட்டான் ‘நவீன எந்திரன்’!

நல்ல சினிமாவை நேசிக்கும் சுவாசிக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு முக்கியமாக சென்னை வாசிகளுக்கு இது திருவிழா காலம். ஆம் வரும் 14ஆம் தேதி முதல் சென்னை சர்வதேச திரைப்பட...

Close