இந்தியா பாகிஸ்தான் விமர்சனம்

நூத்து சொச்சம் படங்கள்ல பார்த்த ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கு இடையே வர்ற ஈகோ க்ளாஸ் தான் படத்தோட மெயின் விஷயமே..? ஆனா அதையும் கூட இன்னும் புதுசா காமெடி, ரொமான்ஸ் கலந்து லாஜிக்கே பார்க்காதீங்கன்னு கிளைமாக்ஸ் வரை விறுவிறுப்பா கொண்டு போறார் இயக்குனர் ஆனந்த். வழக்கறிஞரான விஜய் ஆண்டனி சென்னைக்கு வந்து வக்கீல் வேலைக்காக வீட்டோட சேர்ந்தாப்ல ஒரு ஆபீஸ் தேடுறார். ஆபீஸை பார்க்கிறதுக்கு முன்னாடியே ஹீரோயின் சுஷ்மாவை லேண்ட்மார்க் புக் ஷாப்ல பார்க்கும் விஜய் ஆண்டனி அந்த நொடி மனசை பறி கொடுத்துடுறார்.

விஜய் ஆண்டனியைப் போலவே ஹீரோயின் சுஷ்மாவும் ஒரு வக்கீல். அவரும் ஒரு புரோக்கர் மூலமா ஆபீஸ் தேடுறார். கடைசியில ரெண்டு பேருக்கும் ரெண்டு புரோக்கர்கள் ஒரே வீட்டை காட்ட கொஞ்சம் பெரிய வீடான அந்த வீட்டுக்கு வாடகையும் அதிகமாக இருக்க, இருவருமே வாடகையை ஷேர் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்து வீட்டுக்கு குடி வர்றாங்க ஆனா ரெண்டு பேருக்குமே தாங்கள் ரெண்டு பேருமே வக்கீல்ங்கிற உண்மை குடிவந்த பின்னாடி தான் தெரியுது. ஒரே தொழில்ல இருக்கிற ரெண்டு பேருமே கேஷ் புடிக்கிறதுக்காக அடிச்சிக்க ஆரம்பிச்சு இடத்துல ஈகோ க்ளாஸ் ஸ்டார்ட் ஆகுது. அதுல ஆரம்பிக்கிற ‘இந்தியா பாகிஸ்தான்’ சண்டை மாதிரி முடியாமல் கிளைமாக்ஸ் வரை எப்படி சுவாரஷ்யமா போகுதுங்கிறது தான் மொத்தப்படமும்!

ஒவ்வொரு கதையையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனி இப்படத்திலும் அந்த வெற்றி பார்முலாவை பின்பற்றியிருக்கிறார் என்பதே உண்மை. படங்களில் ஆக்டிங் திறமையை நிரூபித்த விஜய் ஆண்டனி இதில் காமெடியையும் ஒரு கை பார்த்திருக்கிறார். அதில் ஜெயித்தும் விட்டார். அதோடு டான்ஸ், சண்டைக்காட்சிகள் என ஒரு முன்னணி ஹீரோவுக்கான எல்லா மெனக்கிடல்களையும் கேரக்டரில் மெருகேற்றியிருப்பது புத்திசாலித்தனம்.

ஹீரோயின் சுஷ்மா எத்தனை தடவை கேலி செய்தாலும் ஒரு ஹீரோவுக்கான லெவலில் இல்லாமல் கேரக்டருக்காக அதையெல்லாம் ஏற்றுக்கொண்டு நடித்திருக்கிறாரோ அதுவே நடிப்பின் மீதான அவருடைய காதலுக்கு சான்று தான். மெல்லினாவாக வரும் ஹீரோயின் சுஷ்மா ராஜ் கோலிவுட்டுக்கு கிடைத்த சின்ன வயசு அனுஷ்கா. உயரத்திலும், அங்க அழகில் மட்டுமல்ல நடிப்பிலும் கூட அப்படியே அனுஷ்காவின் ஜெராக்ஸ் தான். கண்டிப்பா ஒரு ரவுண்ட்டு வருவார். பல படங்களில் வில்லனாகவே பார்த்து விட்ட பசுபதிக்கு கூட இப்படத்தில் காமெடி கேரக்டர் தான். எங்க ஊர்லயே எங்க அய்யா தான் ரொம்ப படிச்சிருக்காரு வகுப்பு வரைக்கும் என்று பசுபதிக்கு அறிமுகம் கொடுக்கும் போது சிரிக்காமல் இருக்க முடியுமா என்ன?

அதேபோல அவருடைய எதிரியான எம்.எஸ்.பாஸ்கர் எதற்கெடுத்தாலும் கண்ணை மூடி கைகளை தூக்கி ஆத்தாவை கும்பிட்டு உத்தரவு வாங்குவதும், அதற்கு பக்கத்தில் இருந்தே மணி ஆட்டும் மனோபாலாவும் கலக்கலான காமெடி காம்பினேஷன். இவர்களோடு வீட்டு புரோக்கராக ஜெகன், மனோபாலா, யோகிபாபு, காளி,முனீஸ்ராஜா, டி.பி.கஜேந்திரன் என ஒரு காமெடி கூட்டணியை வைத்து இடைவேளைக்குப் பிறகு கிராமத்து பேக் ட்ராப்பில் கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். குறிப்பாக யோகி பாபு செய்யும் காமெடிகள் எல்லாமே டைமிங் காமெடி தான். எங்க அய்யாவோட பேரு காட்ட முத்து அவருக்கு இன்னொரு பேரும் இருக்கு என்று இடைவெளி விட்டு அதுவும் காட்ட முத்துதான்னு சொல்வார் பாருங்க சான்ஸே இல்ல.

போன் ஸ்க்ரீனில் வானிலை ரிப்போர்ட்டை பார்த்து இப்போ மழை வரும் என்று சொல்லும் ஹீரோயினை அடடே இந்த பொண்ணு சொல்றதெல்லாம் அப்படியே நடக்குது. அப்போ இவகிட்ட ஏதோ சக்தி இருக்கு என்று நம்பும் வெள்ளந்தி கிராமத்து மக்களின் இயல்பையும் காட்டி சிரிக்க வைக்கிறார்கள். இப்படி படம் முழுக்க சிரித்து சிரித்து களைத்துப் போக காமெடிக்காட்சிகள் வரிசை கட்டி நிற்கின்றன.

நகரம், கிராமம் என இரண்டு ஏரியாக்களையும் சரிசமமாக கதையை நகர்த்தி கொண்டு போகிறார் இயக்குனர் ஆனந். காதலுக்கு மரியாதை படத்தின் ஒரிஜினல் டிவிடி படத்தின் ஆரம்பத்தில் இருந்து கிளைமாக்ஸ் வரை வருகிறது. அதை வைத்து கிளைமாக்ஸில் காபி காபி என்று காளி வெங்கட் செய்யும் காமெடி கிளைமாக்ஸ் கலகல. இப்படி படம் முழுக்க லாஜிக்கே பார்க்காமல் சிரித்து ரசிக்க ஏக்கப்பட்ட சீன்கள் உண்டு.

பொதுவாக சுந்தர்.சி. படங்கள் தான் இந்த டைப்பில் இருக்கும். இப்படத்தின் இயக்குனர் ஆனந்தும் அந்த வகை காமெடி டைப்பாகத்தான் இருக்கிறார். போதாக்குறைக்கு நாம ரொம்ப சாதாரண பேசுற வார்த்தைகளுக்கு காமெடியா அர்த்தம் வெச்சு படத்தை நகர்த்திக்கிட்டு போறார் பாருங்க… அடடே இன்னொரு சுந்தர்.சி கோலிவுட்டுக்கு கெடைச்சாச்சு போலிருக்கேன்னு தான் சொல்லத் தோணுது.

ஓம் ஒளிப்பதிவில் நைட் எபெக்ட் காட்சிகள், கிராமத்தின் பசுமையான பேக்கிரவுண்ட், பல கோடி பெண்களிலே பாடலில் பாலைவனத்தின் அழகு பளிச்

தீனா தேவராஜன் இசையில் ஒரு பொண்ணைப் பாத்தேன் மாமா…, பல கோடி பெண்களிலே, வாடி குடி லேடி என எல்லா பாடல்களும் வெரைட்டி பீட்ஸ்.

ஓப்பனிங் டைட்டில் கார்டு முடியவும் அடுத்த கால் மணி நேரத்துல சிரிக்க ஆரம்பிக்கிற ரசிகர்களை எண்டு ரோலிங் டைட்டில் ஸ்க்ரீனை விட்டு மறையிற வரை சிரிக்க வெச்சு தான் அனுப்புறார் இயக்குனர் ஆனந். ஆக இந்தியா பாகிஸ்தான் சீரியஸ் இல்ல சிரிப்பு

-சக்திவேல்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மதுரை சீசன்? புதுப்பிக்க வரும் மதுரை மா வேந்தர்கள்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை மதுரையை குத்தகை எடுத்திருந்தது தமிழ் சினிமா. அரிவாளோ, கத்தியோ, உருட்டுக்கட்டையோ, ஏதோ ஒன்றை முதுகுக்கு பின்னால் மறைத்தபடி வரும் ஹீரோ,...

Close