இந்தியன் 2 க்கு என்ன தலைப்பு? கமல் முடிவுக்கு ஷங்கர் ஆஹா!
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கப் போனால் கூட தன் முக ரேகைகளில் மை தடவி அரசியல் வீசுவார் போலிருக்கிறது கமல்? அந்தளவுக்கு நாட்டு நலனில் திடீர் அக்கறை பிய்த்துக் கொண்டு ஓடுகிறது அவரது பேச்சில், செயலில், எரிச்சலில், புகைச்சலில்!
அப்படிப்பட்டவருக்கு இந்தியன் 2, கைக்குக் கிடைத்த கேரம் போர்டு அல்லவா? எல்லா விரல்களாலும் அடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதில் முதல் அடி இதுதான். கமல் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? வந்தாலும் தேறுவாரா? இப்படியெல்லாம் முணுமுணுக்கும் மக்களுக்கு, ‘நான் தலைவனாகிட்டேன்’ என்று சொல்லும் விதமாக ஒரு டைட்டிலை ‘ச்சூஸ்’ பண்ணியிருக்கிறாராம் அவர்.
அதை ஷங்கரிடம் சொல்ல, அவரும் சம்மதித்துவிட்டதாக தகவல்.
அப்படியென்ன பொல்லாத தலைப்பு?
‘லீடர்’!
கிடைக்கிற பொழுதெல்லாம் வாள் வீசுகிறவன்தான் லீடர். இப்போதைய ‘கொதிநிலை’ கமலுக்கு இது பொருத்தமான தலைப்புதான்!
https://youtu.be/9StaGTRPyrQ