இறுதிச் சுற்று பார்ட் 2 ! அல்ப விஷயத்தில் எரிச்சலான மாதவன்!
வருஷத் துவக்கத்தின் பம்பர் ஹிட் ‘இறுதி சுற்று’தான்! சுதா இயக்கிய இப்படத்தின் மூலம் மீண்டும் ‘மாதவ புராணம்’ ஒலிக்கத் துவங்கியது தமிழ்நாட்டில். படத்தில் நடித்த மாதவன் ஒரு பக்கம் புகழப்பட்டார் என்றால், நிஜ குத்து சண்டைக்காரியான ரித்திகா சிங்குக்கு, ஜிங்குச்சா போட்டது இளைஞர்களின் உலகம்! குத்து சண்டையையும் காதலையும் மிக்ஸ் பண்ணி, அழகான காவியம் படைத்த சுதாவுக்கு அண்டை மாநிலத்திலிருந்தெல்லாம் அழைப்பு.
தெலுங்கில் இப்படத்தை இயக்கி வரும் அவர், மாதவனுக்கு பதிலாக வெங்கடேஷை நடிக்க வைத்திருக்கிறார். விரைவில் ரிலீஸ் ஆகி, அங்கேயும் ரித்திகாசிங்கின் புகழ் கொடி பறக்கட்டும். அதே நேரத்தில், இறுதிசுற்று படத்தின் பார்ட் 2 எடுக்கலாமா என்றும் ஐடியாக்கள் வர… டோலிவுட்டில் ஒரு கண்ணும் கோலிவுட்டில் மறு கண்ணுமாக வேலை பார்க்க ஆரம்பித்திருக்கிறாராம் சுதா.
இறுதிசுற்று பார்ட் 2 வுக்கு தயாரிப்பாளர்கள் ரெடி. கால்ஷீட் கொடுக்க மாதவனும் ரெடி. ஆனால் தலைவாழை இலையில் ஒரு பக்கத்தை கிழித்த மாதிரி ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறாராம் மாதவன். “இந்தப்படத்தில் யாரு வேணும்னாலும் ரிப்பீட் பண்ணட்டும். பட்… ரித்திகா சிங் உள்ளே வந்தால், நான் வரலே…” என்பதுதான் அவரது காஸ்ட்லி கண்டிஷனாம்.
அம்மா, கொழந்தே, மகளே, கன்னுக்குட்டி… என்று ரித்திகாசிங்கை கொஞ்சி கொஞ்சி வேலை வாங்கிய சுதாவுக்கு, மாதவனின் இந்த கண்டிஷன் மலைப்பாக இருக்கிறதாம். ஏன் இப்படி கோபப்படுகிறார் மாதவன் என்று விசாரித்த நமக்கு சொல்லப்பட்ட தகவல், ரொம்ப ரொம்ப சீப் ரகம்.
“ஒண்ணுமில்லங்க… பல பேருக்கு மத்தியில அந்த பொண்ணு மாதவனை ‘அங்கிள்’னு கூப்பிட்டுச்சாம். அந்த எரிச்சல்தான் இவருக்கு” என்கிறார்கள்.
இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கெல்லாமா பியூஸ் கேரியரை புடுங்குவாங்க?
https://youtu.be/RHtpCLnxtOU