சிங்கம் 4 க்கு இப்பவே அட்வான்ஸ்! ஹீரோ விஜய்யா? சூர்யாவா?

அரிவாளுக்கே ஹரிவாள் என்று பெயர் மாற்றுகிற அளவுக்கு, தன் படங்களில் சுற்றோ சுற்றென சுற்றுவார் அவர். வன்முறை, அந்த வன்முறைக்கேற்ற விறுவிறுப்பு என்று சிங்கத்தின் பிடறியில் சவாரி செய்வதில் டைரக்டர் ஹரிக்கு இருக்கிற லாவகம் வேறு ஒருவருக்கும் இல்லை. சிங்கம் ஒன், ட்டூ, என்று வரிசையாக சூர்யாவுக்கு ஹிட் கொடுத்தவர், சிங்கம் 3 ஐ இன்னும் சில வாரங்களில் வெளியிடவிருக்கிறார். அதற்குள் அவருக்கு சிங்கம் 4 பகுதிக்கான அட்வான்சை கொடுத்துவிட்டதாம் ஒரு பெரிய கம்பெனி. அதுவும் சுளையாக இரண்டு கோடி! (புது தாளா, பழசா?)

ஆக ஹரியை வேறு கதையை யோசிக்க விட மாட்டார்கள் என்பது ஒரு புறமிருக்க, இந்த சிங்கம் 4 ல் நடிக்கப் போகும் ஹீரோ யார் என்பதில்தான் ஒரே இழுபறி. விஜய் ஹரி சந்திப்பு நடந்து, அதுவும் பாசிட்டிவ்வாக பதில் வந்து பல மாதங்கள் ஆச்சு. அப்படியிருந்தும் விஜய் ஹரி காம்பினேஷன் அறிவிப்பு என்ன காரணத்தினாலோ இழுபறியாகவே இருக்கிறது. நிஜத்தில் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டால், ஹரி ஒரு ரிங் மாஸ்டர் ஆகிவிடுவார். பெரிய ஹீரோ சின்ன ஹீரோ என்றெல்லாம் பார்க்க மாட்டார். அவர்கள் சாப்பிடும் சாப்பாடு கூட என்னவாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, அதைதான் சாப்பிட வேண்டும் என்று மல்லுக்கட்டுவார். ஷுட்டிங் ஸ்பாட்டில் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்றெல்லாம் கண்டிஷன் போடுவார்.

இதற்கெல்லாம் மசிகிற ஆள் விஜய் இல்லை. ஹரியும் தன் அதிகார போக்கை விஜய்யிடம் வைத்துக் கொள்ள மாட்டார். இருந்தாலும், இந்த பிராஜக்ட் அதனாலேயே தள்ளிப் போகிறதோ என்கிற யூகத்தை எழுப்பி வருகிறது மேற்படி கெடுபிடி. போகட்டும்…

ஹரிக்கு அட்வான்சை தட்டிவிட்ட அந்த பெரிய கம்பெனி, ‘விஜய்யா, சூர்யாவா? அது உங்கள் விருப்பம்’ என்று கூறிவிட்டதாம்!

பெரிய சிங்கமா, சின்ன சிங்கமா என்பதற்கு கோடம்பாக்கமே வெய்…ட்டிங்!

https://youtu.be/Ig8covI7OW4

2 Comments
  1. திரைப்பிரியன் says

    “சிங்கம்” என்றாலே சூரியாதான். சிங்கம் எத்தனை பகுதி வந்தாலும், சூரியாதான் பெஸ்ட். விஜயை அந்த கேரக்டரில் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

  2. Singam4 says

    Vijay is Funny Police. Plz dont spoil Singam 4.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
திருக்குறளுக்கு நாட்டுபுற இசை! வைரமுத்து, பாரதிராஜா கலந்து கொள்ளும் விழா!

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள், இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமான வாழ்வியல் பாடமாக இருந்து வருவதை, குறள் அறிந்த பலரும் ஒப்புக் கொள்வார்கள். அப்படிப்பட்ட திருக்குறளுக்கு பல்வேறு...

Close