தாறுமாறான ஹிட்! ஆனால் டைரக்டருக்கு சம்பள பாக்கி? மெய்யாலுமா மேன் மக்கள்ஸ்?

அஜீத் ஹேப்பி. அக்கம் பக்கத்துல உள்ளவங்கள்லாம் ஹேப்பி. தயாரிப்பாளர் ஹேப்பி. விநியோகஸ்தர்கள் ஹேப்பி, தியேட்டர்காரர்கள் ஹேப்பி, டைரக்டரும் ஹேப்ப்ப்ப்ப்ப்பிதான்… ஆனால்? என்று கேள்விக்குறி வைக்கிறது வேதாளத்தை நன்கு அறிந்த உள் வட்டாரம்! அந்த ஆனாலுக்கு பின்னாலிருக்கும் ஐயோவை கேட்டால், “அடப்பாவமே” என்பீர்கள்.

ஒரு மாஸ் ஹீரோவுக்கு என்ன மாதிரியான சீன்கள் வைத்தால் ரசிப்பார்கள் என்பதை நன்கு உணர்ந்து அதற்கேற்ப ஒரு படத்தை கொடுத்த டைரக்டர் சிவாவை ரிலீசுக்கு பின் நேரில் அழைத்து மனம் விட்டு பாராட்டியிருக்கிறார் அஜீத். இந்த பாராட்டுக்கு ஒரு அழுத்தமான காரணமும் உண்டு. சில மாதங்களுக்கு முன் வந்த என்னை அறிந்தால் படத்திற்கு இப்படியொரு ஓப்பனிங்கும், வரவேற்பும் தன் ரசிகர்களே தரவில்லை என்கிற உண்மை அவருக்கு தெரியுமல்லவா? மொத்தத்தில் தன் ரசிகர்களின் மன ஓட்டத்தை நன்கு அறிந்தவர் சிவதாதான் என்ற முடிவுக்கு அஜீத் வந்திருப்பதாக தெரிகிறது.

“ஜனவரியில் ஒரு படம் சேர்ந்து தர்றோம்” என்றாராம் சிவாவிடம். இது அஜீத்தின் அன்புக்கட்டளைதான். அந்த நேரத்தில் கூட, தன் சம்பள பாக்கியை பற்றி அவரிடம் புலம்பாமல், “கண்டிப்பா சார்…” என்று கூறிவிட்டு வந்தாராம் சிவா. உடனடியாக அதற்கான வேலைகளிலும் அவர் இறங்கிவிட்டதாக தெரிகிறது.

ஆனால் இந்த படத்திற்காக பெருமளவு சம்பளம் இன்னும் தரப்படாமலிருக்கிறதாம் சிவாவுக்கு. அந்த பணம் எங்கும் ஓடிவிடாது. கண்டிப்பாக வந்துவிடும் என்று தெரிந்துதான் அவரும் காத்திருக்கிறார். ஆனால் இவருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே சின்ன உரசல் ஒன்று இருப்பதாக கூறப்படுவதை இந்த சம்பள பாக்கி விஷயம் கிளறி விடாமலிருக்க வேண்டும்.

ஏனென்றால் கோழிகள் குப்பையை கிளறினால், சமயத்தில் சூரியனே மறைந்து போகிற அளவுக்கு புழுதி கிளம்பும் அல்லவா?

Read previous post:
Aaranyam movie stills

Close