சிம்பு பட ஷுட்டிங் நிறுத்தப்பட்டதா? சூழ்ச்சியை முறியடித்த மூவ்!
சிம்புவை கட்டம் கட்டி அடிக்க திட்டமிட்டு விட்டார்கள். அதிலும் குறிப்பாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி. ‘சிம்புவுக்கு ரெட் போட்டுட்டீங்க. அப்புறமும் அவர் படத்தின் ஷுட்டிங் நடக்குதே, நிறுத்தவா? நிறுத்தவா?’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஏகப்பட்ட பிரஷர். ஒருவழியாக இந்த விஷயத்தில் தலையிட்ட லைகா நிறுவனம், ‘ஷுட்டிங்கை நிறுத்தாதீங்க. அவருடைய சம்பளத்தை நாங்க கவுன்சில்ல டி.டி. எடுத்து கட்டிடுறோம்’ என்று கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாம்.
முழங்கைக்கு வந்தது மோதிர விரலோடு போச்சு என்று சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார் சுந்தர்சி. சிம்புவை விட்டுவிட்டால் திரும்ப ஷுட்டிங் கொண்டு வருவதென்பது யானையின் தும்பிக்கைக்கு விக்ஸ் தடவுகிற வேலையாச்சே? அதனால்தான் இந்த அண் லிமிடெட் ஹேப்பி.
ஆனால் இந்த ஹேப்பி அதிக நாள் நீடிக்கவில்லை. சிம்புவுக்கு திடீரென உடல் நலக்குறைவு. ஃபுட் அலர்ஜி என்கிறார்கள். (அப்படி என்னத்தை பிரதர் முழுங்கினீங்க?) ஒரு வாரம் ஷுட்டிங்கை பேக்கப் பண்ணிவிட்டு ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு திரும்பிவிட்டது படக்குழு.
பூனை அதுவா கிராஸ் பண்ணினாலும், சகுனம் சரியில்லேன்னு சங்கடப்படுற ஊராச்சே, போர்வையை உதறிட்டு புறப்படுங்க சிம்பு!