விஸ்வாசம் மூன்றாவது லுக்! தள்ளிப் போங்க டிசைனர்!
‘விஸ்வாசம்’ படத்தின் முதல் லுக், இரண்டாவது லுக் இரண்டிலுமே அஜீத்தின் ரசிகர்கள் அப்செட்! போதாக்குறைக்கு விஜய் ரசிகர்கள் தன் தலைவன் ஸ்டைலாக தம்மடித்துக் கொண்டிருக்கும் ‘சர்கார்’ ஸ்டில்லையும் அஜீத்தின் ‘விஸ்வாசம்’ ஸ்டில்லையும் அருகருகே வைத்து, யாருடைய லுக் டாப்? என்று ட்விட்டரில் ட்ரென்ட் அடித்தார்கள். இருந்தாலும் அஜீத்தை விட்டுக் கொடுக்க யாருக்குதான் முடியும்?
காலை பத்தரை மணிக்கு செகன்ட் லுக் வந்த அடுத்த நிமிஷமே டவுன்லோட் செய்து பிரிண்ட் அடித்தார்கள். வினைல் போர்டு அடித்தார்கள். சில ஏரியாக்களில் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமே நடத்திவிட்டார்கள். ‘எல்லா ஃபீட் பேக்குகளும் உடனுக்குடன் வந்தாகணும்’ என்று உதவி இயக்குனர்களுக்கு கட்டளையிட்டிருந்தாராம் டைரக்டர் சிவா. வந்த பின்பு என்ன செஞ்சாரோ?
பின்குறிப்பு- மூன்றாவது லுக்கும் விரைவில் வெளிவரப் போகிறது. இந்த முறை யாருக்கும் வருத்தமோ, கோபமோ வராதளவுக்கு இழைத்து இழைத்து டிசைன் பண்ணப் போகிறார்களாம். அதுக்கு டிசைனரையே மாத்தணும். அதுதானே ஒரே வழி?