இது வேதாளம் சொல்லும் கதை

கொடைக்கானல் ஓண்ட் மியூசிக் விடியோவை இயக்கிய ரதிந்தரன் ஆர் பிரசாத் ஒரு முழு நீள திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். அதற்கு ‘இது வேதாளம் சொல்லும் கதை’ என்று பெயர் இடப்பட்டுள்ளது. இதில் அஷ்வின் (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜீரோ), மற்றும் குரு சோமசுந்தரம் (ஆரண்ய காண்டம், ஜோக்கர்) இணைந்து நடிக்க உள்ளனர்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இத்திரைப்படத்திற்கான இசைப்பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டார். பிரபல ஹாலிவுட் நடிகரும், மல்யுத்த வீரருமான க்ரெக் ப்யூரிட்ஜ்( Greg Burridge) இப்படத்திற்கான சண்டை காட்சிகளை வடிவமைத்து, வில்லனாகவும் நடிக்க உள்ளார். இத்தாலியை சேர்ந்த ராபெர்டோ ஜாஜெர் (Robertto Zazzara) இப்படத்திற்கான ஒளிப்பதிவு பொறுப்பை ஏற்றுள்ளார்.

இப்படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கில் இம்மாதம் துவங்க உள்ளது. தொடர்ந்து ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. சண்டை காட்சிகளுக்காக அஷ்வின் உட்பட 30 மல்யுத்த வீரர்களுக்கு க்ரெக் ப்யூரிட்ஜ் பயிற்சி அளிக்கிறார்.

கொடைக்கானல் ஓண்ட் மியூசிக் வீ டியோ

சுமார் 40 லட்சம் பேர் கொடைக்கானல் ஓண்ட் மியூசிக் வீடியோவை இணையத்தில் பார்த்துள்ளனர். ஹாலிவுட் மற்றும் பாலிவுட் பிரபலங்களான நிகி மினாஜ், ஆஷ்டன் குட்சர், ஷேகர் கபூர் ஆகியோர் கொடைக்கானல் ஓண்ட் வீடியோவை பாராட்டி உள்ளனர்.

ரதிந்திரன் பிரசாதின் 30 நிமிட குறும்படம் ‘ஸ்வேயர் கார்ப்பொரேஷன்’ (Swayer corporation) கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வானது குறிப்பிடத்தக்கது.

‘இது வேதாளம் சொல்லும் கதை’ திரைப்படத்தை ஹோல் வைட் ஓர்ல்ட் ஃபிலிம்ஸ் சார்பில் பஸாக் கேஸியர் பிரசாத் (Basak Gazier Prasad) தயாரிக்க உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எல்லா மொழியிலும் ஒரே அப்பா! சாதித்த சமுத்திரக்கனி!

நல்லப்படங்கள் எப்போது வந்தாலும், குளிர குளிர கொண்டாடுகிற ரசிகர்கள் இருக்கும் வரை அப்பா மாதிரியான திரைப்படங்களுக்கு அம்பாரி சவாரிதான்! குழந்தைகளும் ரசித்து, அப்பாக்களும் ஆராதித்து, குடும்பங்களும் கொண்டாடுகிற...

Close