ஆளுங்கட்சி சேனல் அழைப்பு – சந்தோஷத்தில் வடிவேலு

கிழக்கு வெளுத்ததடா… கீழ்வானம் சிவந்ததடா என்று ஒரு காலத்தில் சூரிய உதயத்தை கொண்டாடிய வடிவேலு அதற்கப்புறம் எல்லா சூரிய உதயத்தையும் சொந்த ஊரான மதுரையிலேயே இருந்து பார்க்கும்படி ஆனது நிலைமை. கிட்டதட்ட இரண்டு வருஷங்கள் உருண்டோட… தன்னை உருண்டோட விட்ட விதியை வென்றே விட்டார் மனுஷன். யெஸ்… அவரை ஜெயா தொலைக்காட்சியே வரவழைத்து ஒரு பேட்டியை எடுத்திருக்கிறது. அதுவும் அம்மாவின் கருணை பார்வையின் அடிப்படையில்.

கொஞ்சம் விரிவாக பார்ப்பாமோ? கடந்த சில தினங்களுக்கு முன் ஜெயா தொலைக்காட்சியினர் இவரை போனில் அழைத்தார்களாம். ஜெயா தொலைக்காட்சியிலேர்ந்து பேசுறோம்… என்றதும் பரவசமாகிவிட்டார் வடிவேலு. ஐயா…. சொல்லுங்க என்று பவ்யம் காட்ட, வர்ற தமிழ் புத்தாண்டுக்கு உங்க பேட்டி வேணும். தர முடியுமா என்றார்களாம்? என்னங்க இப்படி கேட்கிறீங்க? எப்போன்னு சொல்லுங்க. ஸ்டூடியோவுக்கு வந்துர்றேன் என்றாராம் இவர். அப்புறமென்ன? ஒரு சுபயோக சுப தினத்தில் வடிவேலு ஜெயா டி.விக்குள் நுழைய, இத்தனை நாள் வீக்கத்துக்கு இதமான ஐயோடக்ஸை தடவியிருக்கிறது காலம்.

பேட்டியில் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என்றாலும், ‘அம்மா’வை பற்றியும் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறாராம் வடிவேலு.

எதிர்வரும் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 ந்தேதி ஜெயா தொலைக்காட்சி களைகட்டப் போகிறது. ஏனென்றால் அன்றுதான் ரஜினியின் பேட்டியும் எக்ஸ்க்ளுசிவாக வெளியாக போகிறது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
உதயநிதியுடன் ஜோடி சேரும் லட்சுமிமேனன்!

ஸ்கூல் பொண்ணு லட்சுமிமேனனை ‘கூல்’ பொண்ணு என்று வர்ணிக்கிறார்கள் ஹீரோக்கள். பச்சப்புள்ள சிரிப்புக்காரியாக இருந்தாலும், சிலரது பதுங்குக்குழியில் விழுந்து விடாமல் எச்சரிக்கையாக தப்பித்துவிடுகிற பெண் என்பதாலும் இவர்...

Close