ஜெயலலிதா என் ரோல் மாடல்! அடுத்த கணக்கை துவங்குகிறார் த்ரிஷா?
பொதுவாகவே பேய் பிசாசு பில்லி சூனிய படங்களுக்கு கோடம்பாக்கத்தில் தனி மவுசு உண்டு. ஆனால் டெம்ப்ளட் கதைகள், வெளுத்துப்போன செட்டுகள், பல் இளிக்கும் கிராபிக்ஸ் என்று அவ்வகை படங்களை பற்றிய அறிவிப்பு வந்தாலே போதும், ‘செத்தான்டா சேகரு’ மனநிலைக்கு ரசிகனை தள்ளி வருகிற கொடுமையும் நடக்கிறது.
ஆனால் மோகினி அந்த ரகம் அல்ல என்பதை காட்சிக்கு காட்சி கலரூட்டி மிரட்டினார் மாதேஷ். இவர்தான் இப்படத்தின் இயக்குனர். “லண்டன், பாக்காங்க், மலேசியா என்று ரவுண்டு கட்டி இப்படத்தை படம் பிடித்திருக்கிறார் அவர். பேய் பட வரிசையில் பிரமாண்ட செலவை விழுங்கிய படம்னு வேணும்னா சொல்லுங்க” என்று மாதேஷ் சொன்னதை மறுப்பதற்கில்லை.
“படம் முழுக்க ரோப் கட்டி தொங்குன திரிஷாவுக்குதான் முதல் நன்றி சொல்லணும்” என்று தன் 90 கிலோ வெயிட்டையும் பந்து போலாக்கி பம்மினார் மாதேஷ்.
இந்தப்படத்தின் பிரஸ்மீட்டுக்கு வந்திருந்த திரிஷா, முக்கிய நாளிதழ் நிருபர்களை மட்டும் சந்தித்து மிக நீண்ட பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளில் ஒன்று… ஜெயலலிதா கதையை படமாக எடுத்தால் அந்த கேரக்டரில் நீங்க நடிப்பீங்களா?
“நிச்சயம் நடிப்பேன். வேணும்னா வெயிட் ஏத்துறதுன்னா கூட ஏத்துவேன். அவங்கதான் என்னோட ரோல் மாடல். அதுக்காக அரசியலுக்கு வருவீங்களான்னு கேட்காதீங்க” என்றார்.
அவங்களே சொல்லியாச்சு. ஆரம்பிங்களேன்ப்பா…!