அடுக்கடுக்கான அவஸ்தை! ஜெமினியும் போச்சு ஜீவாவுக்கு?

ஜீவா நடிக்க ‘ஜெமினிகணேசன்’ என்ற படத்திற்கு பூஜை போட்டார்கள் அல்லவா? அதுவும் ஜெமினி பேமிலியிடமே நேரடியாக பேசி அந்த தலைப்புக்கு அனுமதி வாங்கிய பின்புதான் பத்திரிகைகளுக்கே அறிவித்தார்கள். அந்த படத்தின் இப்போதைய நிலைமை என்ன? ஜெ-வை விடுங்கள். ‘மினி’ கணேசன் என்று கூட படம் எடுக்க முடியாதளவுக்கு சிக்கலில் இருக்கிறது. ஆபிசை காலி பண்ணி ஆறேழு நாளாகிவிட்டதாம். ஏன்?

சமீபத்தில் வெளிவந்த போக்கிரிராஜா படத்தின் தாறுமாறான தோல்விதான் இந்த படத்தின் கழுத்து சங்கில் கை வைத்துவிட்டது. அறிமுக இயக்குனர் ஒருவர் ஆசை ஆசையாய் முயற்சி பண்ணிய அத்தனை விஷயமும் இப்போது நெட்வொர்க் இல்லாத மோடம் போலாகிவிட்டது. சினிமா இப்படிதான்…

வந்தா மல, போனாலும் மலதான்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிஜேபிக்கு ஆதரவாக ரஜினி பிரச்சாரம்? பெரிசா கிழிக்க நினைக்கும் விஜயகுமார்!

“என்னோட ஒண்ணுவிட்ட சித்தப்பாவோட கன்னுகுட்டிக்கு பொறந்த கடைக்குட்டி எனக்கு நல்ல பழக்கம். எதுவாயிருந்தாலும் முடிச்சுடலாம்” என்று நாக்கு கூசாமல் வாக்கு கொடுக்கிற கூட்டம் சினிமாவிலும் சரி. அரசியலிலும்...

Close