அந்த ஜானிக்கும் இந்த ஜானிக்கும் சம்பந்தமேயில்ல! பிரசாந்த் பதில்!
நடுவுல நடுவுல எந்திரிக்கணும்னா, நாலு பாட்டாவது வேணும்ல? படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு இப்படியொரு தேவையை ஏற்படுத்திவிட்டார்கள் இசையமைப்பாளர்கள். நாய் குலைப்பதை விட மோசமாக இருக்கிற பாடல்களை கேட்டுத் தொலைப்பதைவிட, வராத ஒன் பாத்ரூமை வலிய வரவழைத்துக் கொள்ளலாம் என்று ரெஸ்ட் ரூம் நோக்கி ஒடுகிறார்கள் ரசிகர்கள். தப்பி தவறி வருகிற மெலடிகளுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் ரத்ன கம்பளம் விரித்து கொண்டாடியும் வருகிறது. அது தனி…
இப்படி பாடல்கள் குறித்த அச்சம் இருப்பதாலோ என்னவோ, பிரசாந்த் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் ‘ஜானி’ படத்தில் ஒரு பாடலும் இடம் பெறவில்லையாம். வெற்றிச்செல்வன் இயக்கி, பிரசாந்த் சஞ்சிதா ஷெட்டி இணைந்து நடிக்கும் இப்படத்தில் தேவையில்லாத இந்த ஸ்பீட் பிரேக்கரை அகற்றிவிட்டார்கள். “படம் அவ்ளோ ஸ்பீடா போகும். எதுக்கு தேவையில்லாம பாடல்கள்?” என்கிறார் பிரசாந்த்.
இது என்ன மாதிரியான கதை என்று அவரிடம் கேட்டால், படு சுவாரஸ்யமாக சஸ்பென்ஸ் வைக்கிறார். “நான் இதுவரைக்கும் 74 படங்களில் நடித்துவிட்டேன். அதில் எதிலேயும் இல்லாத கதை இது. இல்லாத புது ட்ரெண்ட் இது” என்கிறார்.
பல வருஷங்களுக்கு முன் ரஜினி, ஸ்ரீதேவி இணைந்து நடித்த ஜானி படத்தின் ரீமேக்கா என்று கேட்ட நிருபர்களிடம், ‘சத்தியமா இல்லேங்க. அது வேற இது வேற’ என்று கூறிய பிரசாந்துக்கு ஆளுயர மாலை போட்டாலும் சரி. ஏன்?
பழைய படங்களின் பெருமையை புதுப்படங்கள் வந்து பொலி போட்டுவிடக் கூடாதில்லையா?
This is remake of Hindi Film Johnny Gaddar