வந்தாச்சு கபாலி பிரியாணி!
குஷ்பு இட்லி, நதியா கொண்டை, ரம்பா குடை என்று தமிழ் சினிமா ரசிகன் கொண்டாடுவதற்கும் குதூகலிப்பதற்கும் ஏராளமான ஐட்டங்களை வழங்கி ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். உண்மைதான்… சில படங்களும், அதில் வரும் விஷயங்களும் காலத்தை கடந்தும் நம் நினைவில் நிற்கும்! அப்படி கபாலி என்றால் நினைவில் நிற்கும்படி ஒரு விஷயத்தை செய்து அசத்திக் கொண்டிருக்கிறது ஏர் ஏஷியா பிளைட் நிறுவனம். இவர்களின் ஸ்டைலை தமிழ்நாட்டின் சந்து பொந்து பிரியாணிக் கடைகளும் இனி பின்பற்றினால், இன்னும் ஐம்பது வருஷங்கள் ஆனாலும் அந்த பிரியாணியும், அதன் பெயரான கபாலியும் மறக்காது. மறக்கவும் விடாது.
ஏர் ஏஷியா விமானச் சேவை கபாலிக்காக பல அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது. கபாலி ரிலீஸ் தினத்தன்று பெங்களூரிலிருந்து கிளம்பும் கபாலி விமானங்கள், பயணிகளுடன் சென்னைக்கு வந்து அவர்களை படம் பார்க்க வைத்து திரும்பவும் பெங்களூர் அழைத்துச்செல்லும் திட்டம் ஒன்றை வகுத்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இந்த நிலையில்தான் இன்றிலிருந்தே தன் கொண்டாட்டத்தை துவங்கிவிட்டது ஏர் ஏஷியா.
மலேசியா பயணிக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த சிறப்பு திட்டத்தின்படி, இந்தியாவுக்கு வரும் பிளைட்களில் கபாலி பிரியாணி என்ற பெயரில் வெஜிடபுள் பிரியாணி வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, பயணக்கட்டணத்தில் பெருமளவு குறைத்தும் உள்ளது. இன்று தொடங்கி கபாலி ரிலீஸ் வரைக்கும் இந்த பிரியாணி திட்டத்தை அமலில் வைத்திருக்க முடிவு செய்திருக்கிறதாம் ஏர் ஏஷியா.
இந்த திட்டத்திற்கு அந்த நிறுவனம் வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா?
ஃபிளை லைக் எ சூப்பர் ஸ்டார்… !!!!
AirAsia, Kabaali Briyani, #Rajini #Rajinikanth #SuperStar #Kabalai #KabaliMovie #PaRanjith #RadhikaApte #RajinikanthStatue #KabaaliReleaseDate #Neruppuda #kabaaliTrailer #kalaipuliDhaanu #vCreations #santhoshNarayanan