கபாலி பார்ட் 2 தயாரிக்கிறார் தனுஷ்! ரஜினி தந்த திடீர் இனிப்பு
ரஜினி படங்களில் அதிக புகை மூட்டத்திற்கு ஆளான படம் கபாலிதான்! ஏதோ ஒரு மூதேவி எங்கிருந்தோ மறைந்து கொண்டு, ‘இது சாதிப்படம்’ என்று கொக்கரிக்க, அதை வகையாக பிடித்துக் கொண்ட பா.ரஞ்சித் அண்டு தொண்டரடி பொடியாழ்வார்கள் அப்படத்தை முழுக்க முழுக்கவே சாதிப்படம் ஆக்கினார்கள். ரஜினி என்கிற ஒரே வெளிச்சம் மட்டும் படத்தின் மீது பலமாக விழுந்ததால், படம் சூப்பர் ஹிட் வரிசைக்குள் இடம் பிடித்தது. ரஜினி படங்கள் இதுவரை பார்க்காத வியாபாரத்தையும் கபாலி பார்த்தது.
அது போதாதா? பாட்ஷாவுக்கே பார்ட் 2 இல்லாத நிலையில், இந்த கபாலிக்கு பார்ட் 2 கனவை ஏற்றிவிட்டது ஊரும் உலகமும். அட… இது நல்லாயிருக்கே என்ற முடிவோடு, கபாலி 2 வை தயாரிக்க களம் இறங்கியது அதே டீம். அதற்கான வேலைகளை ஒரு புறம் கடுமையாக பார்த்து வருகிறாராம் பா.ரஞ்சித். யாருக்கு இந்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பை வழங்குவது என்கிற பிடி ரஜினி வசம் அல்லவா இருக்கிறது?
பலவாறு ஆராய்ந்த ரஜினி, ஏன் அத்தனை செல்வமும் வேறொரு இடத்தில் ஸ்டோர் ஆகணும்? அதுவே தன் மருமகன் வசம் வந்தால், சீறும் சிறப்புமாக இருக்குமே என்று எடை போட, ஒரு சுபயோக சுப தினத்தில் அதற்கான வேலைகளை முடுக்கியும் விட்டதாக பரபரக்கிறது கோடம்பாக்கம். எனவே தனுஷின் வுண்டர்பார் நிறுவனம்தான் கபாலி 2 வை உருவாக்கும் என்பது இப்போதைய நிலவரம்.
ரஜினி என்கிற மூன்றெழுத்து மந்திரத்திற்கு இருக்கிற சக்தி, இதைவிட இன்னும் இன்னும் பெரிய பெரிய திட்டங்களை போடும். போட்ட வேகத்தில் முடிக்கும். அதிலென்ன சந்தேகம்!
[…] கபாலி பார்ட் 2 தயாரிக்கிறார் தனுஷ்! ரஜ… […]