கடுப்பேற்றிய சேனல்! கழுத்தறுத்த கமல்?

பாகுபலி மாதிரியான பிரமாண்டமான படங்கள்தான் கமலுக்கு சரியான தீனி! ஆனால் அவருக்கு ஏன் அப்படியொரு வாய்ப்பு இன்று வரை அமையவில்லை? இந்த கேள்வியை துரத்தினால், அது ஏகப்பட்ட கான்ட்ரவர்சியில் முடியும் என்பதால் அப்படியே விட்டுவிட்டு அடுத்த பிரச்சனைக்கு போவோம். இன்று ரஜினியின் எந்திரனும் சரி, அதற்கப்புறம் எடுக்கப்படவிருக்கிற எந்திரன் 2 ம் சரி. 100 கோடியை விழுங்கி நிற்கிற, நிற்கப் போகிற படங்கள். ஆனால் கமலின் அதிகபட்சமாக பணம் விழுங்கிய படம் என்றால் அது தசாவதாரம்தான். ஆனால் அது எந்திரன் பட்ஜெட்டை விடவும் பல மடங்கு கம்மி. தனது நேரடி போட்டியாளரான ரஜினி 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் நடிக்கும் போது தன்னால் அது முடியவில்லையே என்கிற கவலை ஒரு சூப்பர் நடிகராக கமலுக்கு இருக்கும்தானே?

அங்குதான் அவரது பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டது அந்த சேனல். “சார்… நாங்களே 100 கோடி பட்ஜெட்டில் அந்த படத்தை தயாரிக்கிறோம். சரித்திர பின்னணி கொண்ட படமாக அது உருவாகட்டும்” என்றார்களாம். மிகுந்த உற்சாகத்துடன் வேலையை துவங்கினார் கமல். யானைக்கு விளாம்பழத்தை காட்டி காட்டியே முன்னே அழைத்துச் சென்றது சேனல். இவரும் நகர்ந்து கொண்டேயிருந்தார் விளாம்பழத்தை நோக்கி. கடைசியில் விளம்பழ ஓடு கூட கண்ணில் தென்படவில்லை கமலுக்கு. ஆனால் இந்த ஒரு விஷயத்தை காட்டி காட்டியே நிறைய சாதித்துக் கொண்டது சேனல்.

யானை மாதிரியே இந்த சம்பவத்தை மனதில் வைத்திருந்தாராம் கமல். போட்டுத்தாக்கும் நேரமும் பொருத்தமாக வந்தது. தற்போது அவரது நடிப்பில் உருவாகி வரும் தூங்காவனம் படத்தின் சேட்டிலைட் ரைட்ஸ் எங்களுக்கு வேணும் என்றது சேனல். “தர்றேன். கண்டிப்பா உங்களுக்குதான்… எவ்ளோ தருவீங்க?” என்று பேச்சு வார்த்தையை ஆரம்பித்தாராம் கமல். அதே நேரத்தில் வேறொரு சேனலுடனும் தனது சைலன்ட் மூவ்வை எடுத்து வைத்தார். ஏமாற்றிய சேனல், இன்னொரு முறையும் கமல் ஏமாறுவார் என்று காத்துக் கொண்டிருக்க, இன்னொரு சேனலுடன் ஒப்பந்தம் போட்டு கையெழுத்து இடுகிற கடைசி நிமிஷம் வரைக்கும் இவர்களை நம்பிக்கையோடு காத்திருக்க வைத்திருந்தாராம் கமல்.

“படத்தை எங்களுக்கு வித்துட்டாரே, இன்னுமா அவர்ட்ட கேட்டுகிட்டு இருக்கீங்க?” என்று ஏமாற்று சேனலுக்கு, படம் வாங்கிய சேனல் பெப்பே காட்டிய பிறகுதான் உண்மையே தெரிந்ததாம் இவர்களுக்கு!

ஐயா… சேனல்மாரே! சாணக்யன் ஒருபோதும் கேணக்கியன் ஆவதில்லை!

3 Comments
  1. cine priyan says

    super sir u

  2. kk says

    kazhutharupathu kamalukku kai vantha kalai.

  3. ponmrugeshan says

    super

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கத்துக்குட்டி படத்துக்கு கிடைக்கும் கைதட்டல்கள் முதல்வருக்கு போய் சேரட்டும்! -படக்குழு பரவசம்!

மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பதைப் பாராட்டி 'கத்துக்குட்டி' படக்குழு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், படத்தின் இயக்குநர் இரா.சரவணன் கூறியிருப்பதாவது: தஞ்சை, திருவாரூர்,...

Close