ம்ம்ம்… இதையெல்லாம் எம்.ஜி.ஆர் காலத்தில் பார்த்தது!
ஒருவழியாக இன்று மாடம்பாக்கம் ஏரிக்கரையில் தன் படைபல ரசிகர்களோடு போய் இறங்கிவிட்டார் கமல். முன்னதாகவே அங்கு வந்திருந்த தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கமல்ஹாசனை வரவேற்றார். அந்த ஏரி சுத்தப்படுத்தப்படுவது 25 ஆவது முறையாம். கமல் ஒரு வெள்ளிவிழா நாயகன் என்பதால் இந்த ஏரியை தேர்ந்தெடுத்தார்களோ என்னவோ? இந்த திட்டத்தை இன்று ஒரு நாளுடன் விட்டுவிடாமல் தொடர் முயற்சி செய்தால் நன்றாக இருக்கும்.
மேலேயிருக்கிற புகைப்படத்தில் ஒரு பாட்டி கமலிடம் ஏதோ சொல்ல முற்படுகிறார். இப்படியெல்லாம் படங்களை எம்.ஜி.ஆர் காலத்தில் பார்த்தது. சரித்திரம் திரும்புகிறதோ ?