கமல்… இல்லேன்னா விஜய் சேதுபதி! சீதக்காதி ஜிமிக்ஸ்!

‘நடிச்சா அவரு நடிக்கணும். இல்லேன்னா அந்த கதையை அப்படியே தூக்கிப் போட்டுட்டு வேற கதையை தேடணும்’ இப்படியெல்லாம் ஒரே ஹீரோவை மனதில் வைத்துக் கொண்டு லட்சிய இயக்குனர்களாக திரியும் பலருக்கு கதையும் அமையாம படமும் கிடைக்காம போறது சகஜம்! ஆனால் அவருக்கு(?) ஆசைப்பட்ட கதை இவருக்கு(?) முடிந்ததில் படு குஷியாகி இருக்கிறார் ஒரு இயக்குனர். அவர்தான் பாலாஜி தரணிதரன்.

இவரது இயக்கத்தில் இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவிருக்கும் சீதக்காதி படம், முதலில் கமலுக்காக உருவாக்கப்பட்ட கதை. முழுசாக கதை கேட்ட கமல், ஆஹா ஓஹோ என்று பாராட்டினாலும், அரசியல் புல்லட்டில் ஏறி அவ்வப்போது பட படப்புக் காட்டிக் கொண்டிருக்கும் கமலுக்கு, சீதக்காதியை உடனே ஏற்பதில் கடும் சிரமம். சுமார் ஆறு மாதங்கள் அவருக்காக காத்திருந்த பாலாஜி தரணிதரன், அதே கமல் போல சிறந்த நடிகன் என்று ஊரே கொண்டாடும் விஜய் சேதுபதியை பிக்ஸ் பண்ணிவிட்டார். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற சூப்பர் ஹிட் படத்தை ஏற்கனவே விஜய்சேதுபதிக்கு கொடுத்தவராச்சே! வேலை சுலபத்தில் முடிந்துவிட்டது.

விஜய்சேதுபதி படங்களில் பெஞ்ச் மார்க் என்று சொல்லப்படுகிற அளவுக்கு சிறப்பான படமாம் இது. நாம் சொல்லவில்லை. இன்டஸ்ட்ரி பேச்சு அப்படி. அதற்கு உதாரணமாக இதையும் சொல்கிறார்கள். வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்களை விநியோகஸ்தர்களுக்கு காட்டி விற்பனை செய்த காலமெல்லாம் போச்சு. தண்ணிக்குள் கிடப்பது பாம்பா, கயிறா என்றே தெரியாமல் விலை பேசுகிற வழக்கம்தான் இப்போது. ஆனால் சீதக்காதி படத்தை விநியோகஸ்தர் ட்ரெய்டன்ட் ரவிந்திரனுக்கு போட்டுக் காட்டி வியாபாரம் செய்தார்களாம்.

‘காதி’ன்னாலே ஒரு கம்பீரம்தான்!

1 Comment
  1. Siva says

    என்ன அந்தணன், வெறும் 20 நிமிஷம் வர்ற கேரக்டர்க்கு கமலா? கொஞ்சம் ஓவர்..

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கதையில திருப்தியில்ல! கதற விடுகிறார் ரஜினி?

ரஜினியின் அடுத்தப்படத்தின் பெயர் ‘நாற்காலி’யா? இப்படியொரு கேள்வி இன்டஸ்ட்ரியில் புயல் போல அடித்துக் கொண்டிருக்கிறது. தலைவருக்கு (ஆளும்)நாற்காலியை பிடித்துக் கொடுப்பதுதான் நம் லட்சியமாக இருக்கணும் என்று அவரது...

Close