கதையில திருப்தியில்ல! கதற விடுகிறார் ரஜினி?

ரஜினியின் அடுத்தப்படத்தின் பெயர் ‘நாற்காலி’யா? இப்படியொரு கேள்வி இன்டஸ்ட்ரியில் புயல் போல அடித்துக் கொண்டிருக்கிறது. தலைவருக்கு (ஆளும்)நாற்காலியை பிடித்துக் கொடுப்பதுதான் நம் லட்சியமாக இருக்கணும் என்று அவரது ரசிகர்கள் அல்லும் பகலும் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் போது, ‘நாற்காலி’ என்ற தலைப்பையே வைத்திருப்பதாக செய்தி வந்தால் எப்படியிருக்கும்? ஆனால், நடப்பதே வேறு!

கபாலி, காலா போல ஏமாந்துவிடக் கூடாது என்பதில் படு திண்ணமாக இருக்கிறாராம் ரஜினி. பேட்ட கொடுத்த உற்சாகத்தில் மீண்டும் பழைய ரஜினியாகிவிட்டவருக்கு, (தெரியுமா சேதி? ‘பேட்ட’ இந்து முஸ்லீம் இடையே நடக்கும் ஆணவக் கொலை பற்றிய கதை) இனிமேல் வரப்போகிற படங்கள் அத்தனையும் கமர்ஷியல் வெள்ளமாக இருக்க வேண்டும் என்கிற லட்சிய வெறியே வந்திருக்கிறதாம்.

இந்த ஒரு விஷயத்திற்காகவே ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன இரண்டு கதைகளை ரிஜக்ட் செய்திருக்கிறார் ரஜினி. இப்போது முருகதாஸ் உருவாக்கிக் கொண்டிருப்பது மூன்றாவது கதை என்கிறார்கள். இன்னும் கதையே ரெடியாகவில்லை. அதற்குள் நாற்காலி என்கிற தலைப்பை மட்டும் எப்படி முடிவு செய்திருப்பார்கள்? அதுதான் புரியவில்லை. இருந்தாலும், ரஜினியின் அரசியல் மூவ், மத்திய அரசின் கருணை லுக் இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இருந்தாலும் இருக்கலாம்!

நாற்காலியின் ஸ்குரூ டைட்டா இருக்கா என்று பார்ப்பதுதான் ஏ.ஆர்.முருகதாசின் முக்கிய கடமை. அதை முழுசா நிறைவேற்றிடுங்க இயக்குனரே!

1 Comment
  1. தமிழ் பிரபாகரன் says

    கதையில் திருப்தி இல்லை என்று சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் உங்களிடம்
    சொன்னாரா ???
    அப்புறம், கபாலி மற்றும் காலா படங்கள் உலகளவில் வசூல் சாதனை படங்கள் டா …. பூனை கண்ணை மூடிக்கொண்டால்……. தலைவர் ரஜினி அவர்கள் தான் இந்திய சினிமாவின் கடவுள் . நிரந்திர வசூல் சக்ரவர்த்தி சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா …..
    உங்களுக்கு , உண்மையை தவிர வேற எழுத முடியாதாடா ….
    உண்மைக்கும் உங்களுக்கும் வெகு தூரம் டா ….

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் பேட்ட படம் தமிழ் புத்தாண்டு தினமான பொங்கல் அன்று வெளிவர இருக்கிறது . , 2.௦ படத்தின் மாபெரும் வசூல் சாதனைகளை, தலைவரின் பேட்ட படம் தான் முறியடிக்கும்.
    தலைவரை வெல்ல எவண்டா ???
    பேட்ட பராக் பேட்ட பொங்கல்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிரசாந்த் ரிட்டர்ன்ஸ்! ஏணியாகுமா ஜானி?

Close