பிரசாந்த் ரிட்டர்ன்ஸ்! ஏணியாகுமா ஜானி?
வண்டி ஒரே ஸ்பீடில் ஓடியிருந்தால் இந்நேரம் பிரசாந்த், அஜீத், விஜய், விக்ரம், லெவல் ஹீரோவாகவே இருந்திருப்பார். வேகமாக போய் கொண்டிருந்த நேரத்தில் அவரே ஒரு பிரேக் அடித்து ஓரங்கட்டியதன் விளைவு… மீண்டும் மூச்சை பிடித்து ஓட வேண்டியதாக இருக்கிறது. பட்… அப்போது பார்த்த அதே பிரசாந்த் இப்பவும். (ஒங்க ஜிம் ட்ரெய்னருக்கு கோவில் கட்டி கும்பிடுங்க பிரசாந்த்)
எஸ்.ஜே.சூர்யா, விஜய் ஆன்ட்டனி உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்களிடம் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய வெற்றிச்செல்வன் இயக்கும் ஜானி படம், பிரசாந்த் பயணிக்கும் வண்டியை 140 கி.மீ வேகத்தில் செலுத்தும் என்கிற நம்பிக்கை வந்திருக்கிறது சினிமா வட்டாரங்களில். எப்படி?
முதல் காம்ப்ரமைஸ் ஒன்றே அதற்கு சாட்சி. இந்தியில் வந்த ஒரு படத்தைதான் தமிழில் தழுவி எடுத்திருக்கிறார் வெற்றி. நிறைய மாற்றங்களுடன் வரப்போகும் இப்படத்தில், ‘பாடல்கள் இல்லாமல் இருந்தால் அந்த ஸ்பீட் குறையாம இருக்குமே சார்?’ என்றாராம் தயாரிப்பாளர் தியாகராஜனிடம். ‘பையனை உங்ககிட்ட ஒப்படைச்சுட்டேன். இனி நீங்களாச்சு, அவராச்சு…’ என்று கூறிவிட்டார் தியாகராஜன். இப்படி எந்த தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக உருவாகியிருக்கிறது ஜானி.
அப்புறமென்ன? தான் நினைத்த மாதிரியெல்லாம் பிரசாந்த்தை உருவாக்கியிருக்கிறார் வெற்றி. ‘முதலில் வெயிட் குறைக்கணும்’ என்று கேட்டுக் கொண்டாராம். உடனே அமெரிக்காவுக்கு பறந்த பிரசாந்த், அங்கு ஒரு மாதம் தங்கியிருந்து உடல் எடையை குறைத்துக் கொண்டு திரும்பியிருக்கிறார்.
ரஜினி, கமல், அஜீத், விஜய் படங்களுக்கு மட்டுமே ஓவர்சீஸ் பிசினஸ் டீப் ஏரியாக்களிலும் இருக்கிறது. இப்போது ஜானியையும் உலகத்தின் சந்து பொந்துகளில் எல்லாம் ரிலீஸ் செய்யவிருக்கிறார் தியாகராஜன். முக்கியமாக மலேசிய சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில் பிரசாந்துக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அங்கு மட்டும் அதிக தியேட்டர்களில் வெளியிடுகிறார்களாம்.
ஜானி, பிரசாந்துக்கு ஏணி!