சதியை முறியடித்த விஸ்வாசம்! பிரமாண்டம் ஸ்டார்ட்ஸ்!

அஜீத் படமா இருந்தாலும் இதுதான் நிலைமை! தன் பூதாகரமான கைகளால் எல்லாவரையும் வாரி வழித்துவிட்டு, தான் மட்டும் ஜெயிக்கணும் என்கிற வெறி கொண்டவர்கள் நிறைந்த பகுதியாகிவிட்டது கோடம்பாக்கத்தின் வியாபார ஏரியா. அஜீத் படத்திற்கே இந்த நிலைமையா என்கிற அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது சிலரின் செயல்பாடுகள்.

கடந்த இரண்டு மாதங்களாகவே ‘பொங்கலுக்கு ரிலீஸ்’ என்கிற டேக் லைனுடன் விஸ்வாசம் வெளியீட்டு தகவல்கள் வெளியாகிவிட்டன.

இது ஒருபுறமிருக்க சொன்ன தேதியை விட முன்னதாகவே படத்தை முடித்துவிட்டார் கார்த்திக் சுப்புராஜ். அப்பறமும் சும்மாயிருக்குமா பேட்ட? நாங்களும் பொங்கலுக்கு வர்றோம் என்று கிளம்பிவிட்டார்கள். ஒரே தண்டவாளத்தில் இரண்டு பெரிய ரயில்கள். ஊர் தாங்குமா, பேசன்ஜர்ஸ் கதி என்ன என்கிற கவலை ஏதுமில்லாமல், இரண்டு என்ஜின் டிரைவர்களும் ஆக்சிலேட்டரை அழுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் காரணமாக வியாபார ஏரியாவே களேபரம் ஆகிக்கிடக்கிறது.

‘10 ந் தேதி ஒருவரும், 14 ந் தேதி இன்னொருவரும் வாங்களேன்ப்பா’ என்று சமாதானப்படலம் ஒருபுறம் நடந்து வந்தாலும், பேட்ட-யின் கைகள் விஸ்வாசத்தின் குரல்வளையை நெறிக்க கிளம்பியிருப்பதாகவும் தகவல்கள் எழுகின்றன.

ஒரேயடியாக ‘விஸ்வாசம்’ ரிலீசை தள்ளி வைக்கவும் ஒரு நிர்பந்தம் கொடுக்கப்படுகிறதாம். ஆனால் அறிவித்த தேதியில் உறுதியாக இருக்கும் விஸ்வாசம், எவ்வித இடையூறுக்கும் செவி சாய்க்காமல் தன் விளம்பர வேலையை துவங்கிவிட்டது. சென்னையின் மையப்பகுதியான சத்யம் காம்பளக்ஸ் அருகில் வைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான விஸ்வாசம் பேனர், ‘யாரு குறுக்க வந்தாலும் செஞ்சிட்டு போயிட்டே இருப்போம்’ என்று சொல்லாமல் சொல்லி வருகிறது.

இதே தில்லோடு சொன்ன தேதியில் ரிலீஸ் செய்துவிட்டால் அஜீத் ரசிகர்களின் மனசு சாந்தமாகிவிடும்.

இல்னேன்னா?

Read previous post:
மீண்டெழுந்தார் சேரன்!

Close