ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் கமல் ஸ்பீச்! தமிழா பெருமை கொள்!

ஓங்கி ஜோரா ஒரு தடவை கைதட்டிவிட்டு இதை படிங்க மகா ஜனங்களே… ஏனென்றால் இது முதன் முறையாக ஒரு தமிழ் நடிகருக்கு கிடைத்த அங்கீகாரம். பெருமை, அதற்கப்புறமும் ஏதாவது நல்ல வார்த்தை இருந்தாலும் நாலைந்தை எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள்! அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகம்தான் ஹார்வர்ட். இங்குதான் அவ்வப்போது நம்ம இந்தியாவின் கலக ஸ்டார் சுப்ரமணிய சாமி கிளாஸ் எடுக்கிறார் என்றெல்லாம் சொல்வார்கள். (ஐயோ பாவம்… ஸ்டுடன்ஸ்சை எந்தளவுக்கு குழப்பினாரோ) இந்த ஒரு விஷயம்தான் அந்த பல்கலைக்கழகம் குறித்த நம்பிக்கையை பிளேடு போட்டு கெடுத்தது என்றாலும், பரவலாக பேசப்படுவது அப்படியொரு பல்கலைக்கழகத்தின் மர நிழலில் உட்காரக் கூட போன ஏழேழு ஜென்மத்தில் புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும் என்பதுதான்.

இங்குதான் சிறப்பு உரையாற்ற அழைக்கப்பட்டிருக்கிறார் நம்ம பத்மஸ்ரீ கமல்ஹாசன். பிப்ரவரி 6 ந் தேதி இந்த உரை நிகழ்த்தப்படவுள்ளதாம். இவருடன் இந்தியாவின் மிக முக்கியமான அரசியல்வாதியான சசிதரூரும் அங்கு உரையாற்றுகிறார்.

கமலுக்கு தரப்பட்டிருக்கும் இந்த அங்கீகாரத்தின் மூலம் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது. ஒரு காலத்தில் இதே கமலை ஏர்போர்ட் வாசலில் உட்கார வைத்துவிட்டார்கள். அவரது பெயருக்கு பின்னேயிருக்கும் ஹாசன் என்ற பாதிப்பெயர் அவரை முஸ்லீம் என்று நினைக்க வைத்ததாம். ட்வின் டவர் தகர்க்கப்பட்ட பின் தாடி வைத்த எல்லாரையும் சந்தேகப்பட்ட அமெரிக்கா இவரையும் சந்தேகப்பட்டு உட்கார வைத்துவிட்டது. அதற்கப்புறம், இவர் தன்னை பற்றிய சுய விபரங்கள் அடங்கிய இன்டர்நெட் தகவல்களை காட்டி நிரூபித்து அதற்கப்புறம் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். தற்போது அதே நாடு அவரை அழைத்து கவுரவிப்பது கமல் என்ற மகா புத்திசாலியை நாட்டுக்கு மறுபடியும் ஒருமுறை நினைவு படுத்தியிருக்கிறது.

போயிட்டு (யாரையும் குழப்பாம பேசிட்டு) வாங்க நாயகரே..

Read previous post:
என்னது… இந்த வாய்ப்பை விஷால் வாங்கித்தந்தாரா? வரலட்சுமி ஷாக்?

இன்னும் சில தினங்களில் திரைக்கு வந்துவிடும் தாரை தப்பட்டை! பாலா படம் என்றாலே வியப்பும் திகைப்புமாக வேறு வேறு அனுபவங்கள் கிடைக்கும் ரசிகனுக்கு! அதைவிட பெரிய அனுபவம்...

Close