கலாபவன் மணி மரணம்! கமல், சூர்யா கவலை

திடீரென காலமாகிவிட்டார் கலாபவன்மணி. சமீபத்தில் நடிகை கல்பனா மறைந்த துக்கத்திலிருக்கும் மலையாள படவுலகத்திற்கு இது பேரிடி. இது ஒரு புறமிருக்க, அவருடன் நடித்த அத்தனை ஹீரோக்களும் இந்த செய்தியை ஜீரணிக்க முடியாமல் தத்தளிக்கிறார்கள். சமீபத்தில் பாபநாசம் படத்தில் கமலுடன் நடித்திருக்கிறார் மணி. இந்த மரணம் தற்கொலையா என்ற ரீதியிலும் போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்க, கல்லீரல் பாதிப்பின் காரணமாகதான் அவர் இறந்திருக்கிறார் என்று கமல் கூறியது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் பாபநாசம் படப்பிடிப்பில் மணி தனது உடல் நிலை குறித்து ஏதேனும் தகவல்களை கமலிடம் பகிர்ந்து கொண்டிருக்கவும் கூடுமல்லவா?

அவரது மரணத்திற்கு கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எனது நண்பர் கலாபவன் மணியின் இறப்பு எனக்கு வருத்தமளிக்கிறது. என்னுடைய மலையாள சகோதரர்களில் மேலும் ஒருவர் கல்லீரல் நோயால் இறந்துள்ளார். காலத்தை விடவும் அதிக திறமை படைத்தவர் கலாபவன் மணி” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மரியாதைக்குரிய மாபெரும் கலைஞர் கலாபவன் மணி , என் இனிய நண்பர் , அவருடன் பயணித்த நிமிடங்களை நெஞ்சார நினைவுகூர்கிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகர் சூர்யா.

நல்ல நடிகர் என்பதையெல்லாம் தாண்டி, அவர் அடிப்படையில் நல்ல மனிதர் என்றும் கூறி வருகிறார்கள் திரையுலகத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இவர்தான் அடுத்த விஜயசாந்தி!

கிருத்திகா பிலிம் கிரியேஷன் சார்பில் ஏ எஸ் முத்தமிழ் என்பவர் கதை எழுதி தயாரிக்கும் படம் அர்த்தநாரி . ராம் குமார் ,அருந்ததி ஜோடியாக நடிக்க, இயக்குனர்...

Close